நாங்களா அல்லது மருமகனா: மம்தாவுக்கு திரிணமுல் எம்.பி., எச்சரிக்கை
12 ஆனி 2026 வெள்ளி 07:08 | பார்வைகள் : 210
அபிஷேக் மூத்தவர்களை அவமதித்து உள்ளார். கட்சியின் சீரழிவுக்கு அவரே காரணம் என திரிணமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கையெழுத்து மோசடி வழக்கில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜிக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியுள்ளது. இருப்பினும், அவர் மேற்கு வங்க குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு இன்று மாலை 6 மணிக்குள் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், மம்தா பானர்ஜியின் மருமகன் கடைசி நேரத்தில் தன்னை வழக்கறிஞர் பதவியிலிருந்து நீக்கிவிட்டதாகவும், அந்தச் செயலை அவமானகரமானது என்றும் திரிணமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: நான் மம்தா கட்சியில் தான் நீடிக்கிறேன். ஆனால் அவர் இப்போது ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
இது மிகவும் அவமானகரமானது. நள்ளிரவில், வழக்கறிஞர் மாற்றப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மூத்தவர்களை மதிக்கத் தெரியாது. அபிஷேக் என்னை ஒருபோதும் நம்பியதில்லை, இனியும் நம்பப்போவதில்லை. அவர் யார்? எவ்வளவு ஆணவக்காரர். அவரால் கட்சி அழிக்கப்பட்டுவிட்டது.
இனி அபிஷேக் சார்பில் ஆஜராகப் போவதில்லை. நான் 45 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். இதுபோன்ற ஆணவமான நடத்தையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் மம்தாவிடம் சொல்வேன். ஒன்று அபிஷேக்கை வைத்துக்கொண்டு எங்களை விடுங்கள், அல்லது எங்களை வைத்துக்கொண்டு அபிஷேக்கை நீக்குங்கள். இவ்வாறு கல்யாண் பானர்ஜி கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan