மேட் இன் இந்தியா ஏர்பஸ் சி 295 விமானத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி
12 ஆனி 2026 வெள்ளி 06:04 | பார்வைகள் : 180
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 ராணுவப் போக்குவரத்து விமானத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்தது என இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது.
விமானப்படைக்காக ஏர்பஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் கீழ் இந்தியாவில் சி295 போக்குவரத்து விமானம் தயாரிக்கப்படுகிறது. இது நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் திட்டத்தில் ஒரு மைல்கல் ஆக பார்க்கப்படுகிறது.
இந்த விமானத்தின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்தது என இந்திய விமானப்படை தெரிவித்து உள்ளது. 9,000 கிலோ வரை சுமையைச் சுமந்து செல்லும் திறன், 24 ஸ்ட்ரெச்சர்களை வைக்கும் இடவசதி உள்ளிட்ட பல்வேறு பிரத்யேக வசதிகளுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
வெற்றிகரமான முதற்கட்ட சோதனைக்கு குழுவினரை இந்திய விமானப்படை பாராட்டியுள்ளது. இது குறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தச் சாதனை, இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி திறன்களை வலுப்படுத்துவதோடு, உள்நாட்டு பாதுகாப்பு திறனை வளர்ப்பதில் இந்திய விமானப்படையின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது'' என குறிப்பிட்டுள்ளது.
எங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள இந்திய விமானப்படை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் இந்திய விண்வெளித் துறையின் எதிர்காலத்தைக் கட்டமைக்கிறோம்,' என்று ஏர்பஸ் டிபென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan