Paristamil Navigation Paristamil advert login

சொந்த மண்ணில் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!

சொந்த மண்ணில் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!

11 ஆனி 2026 வியாழன் 15:24 | பார்வைகள் : 202


திரையுலகில் இயக்குனர் இமயம் என அழைக்கப்படுபவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே துவங்கி 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். பல புதுமுக நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறார். ஏற்கனவே இவரின் மகன் மனோஜ் இறந்துவிட்ட நிலையில் தனிமையில் வாடிய பாரதிராஜா நேற்று சென்னை நீலாங்கரை வீட்டில் அதிகாலை 2 மணியளவில் காலமானார். எனவே அவரின் உடல் திரையிலகினரின் அஞ்சலிக்காக நேற்று அந்த வீட்டில் வைக்கப்பட்டது. அப்போது ரஜினி, கமல், தனுஷ், முதல்வர் விஜய் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்..

அதன்பின் நேற்று இரவு அவரின் உடல் தேனியில் உள்ள அவரின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வத்தலகுண்டு காட்ரோடு பகுதியில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவரின் உடலை நல்லடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

இன்று மாலை 4.30 மணியளவில் அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க பாரதிராஜாவின் உடல் அவரின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு சார்பாக அமைச்சர்கள் சி.டி.நிர்மல் குமார், வன்னியரசு ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர். அதேபோல் சீமான், வெற்றிமாறன், அமீர், பார்த்திபன், பாக்கியரா,ஜ் ராதிகா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் நேரில் கலந்து கொண்டனர்..