Paristamil Navigation Paristamil advert login

முதல்வர் முதல் பிரதமர் வரை; அதிலும் புதிய சாதனையுடன் முதலிடத்தில் பிரதமர் மோடி

முதல்வர் முதல் பிரதமர் வரை; அதிலும் புதிய சாதனையுடன் முதலிடத்தில் பிரதமர் மோடி

11 ஆனி 2026 வியாழன் 06:57 | பார்வைகள் : 168


மாநிலங்களில் முதல்வராக இருந்து பின்னர் நாட்டின் பிரதமராக மொத்தம் 6 பேர் இருந்துள்ளனர். அவர்களில் அதிகம் நாள் முதல்வராகவும், பிரதமராகவும் இருந்து பிரதமர் மோடி புதிய சாதனை படைத்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட நாள்கள் பிரதமராக இருந்தவர் என்ற சரித்திர சாதனையையும், பெருமையையும் பிரதமர் மோடி பெற்று உள்ளார். தமது தொடக்க காலத்தில் மாநில அரசியலில் தடம் பதித்து முதல்வராக இருந்தார். பின்னர் தேசிய அரசியலில் கால் பதித்து, 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை சுதந்திர இந்தியாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக வரலாற்று சாதனை படைத்து உள்ளார்.

பிரதமர் மோடிக்கு நாட்டின் அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் மட்டும் அல்லாது, உலக நாடுகளின் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நீண்ட காலம் பிரதமர் என்ற சாதனையை படைத்த பிரதமர் மோடி அதிக நாட்கள் மாநில முதல்வராகவும், இருந்துள்ளார்.

பிரதமர் மோடி போன்று, மாநில முதல்வர்களாக பலர் இருந்தாலும், முதல்வர், பிரதமர் என இரு பதவிகளிலும் அதிக நாட்கள் கோலோச்சியவர் என்ற வியத்தகு வரலாற்றையும் படைத்துள்ளார். முதல்வர், பிரதமர் என இரு பதவிகளிலும் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்ற பட்டியலில் பிரதமர் மோடி அசைக்க முடியாத தலைவராக முதலிடத்தில் உள்ளார்.

முதல்வராக 4611 நாட்கள்

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக 2001ம் ஆண்டு 2014ம் ஆண்டு வரை (அதாவது பிரதமராக பதவியேற்கும் வரை) இருந்துள்ளார். அதன் பின்னர் பிரதமராக நீடிக்கிறார். இதில் முதல்வராக 4611 நாட்களும், பிரதமராக 4399 நாட்களும் இருந்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இருப்பவர் மொராஜி தேசாய். இவர் 1952ம் ஆண்டு முதல் 1956ம ஆண்டு வரை பம்பாய் (அப்போது ஒருங்கிணைந்த பம்பாய் என்று பெயர்) முதல்வராக 1655 நாட்கள் முதல்வராகவும், பிரதமராக 857 நாட்களும் இருந்துள்ளார். இரு பதவிகளிலும் இவர் இருந்த மொத்த நாட்கள் 2512 ஆகும்.

3வது இடத்தில் இருப்பவர் நரசிம்மராவ். இவர் ஆந்திர முதல்வராக 1971ம் ஆண்டு முதல் 1973ம் ஆண்டு வரை பதவி வகித்தார். முதல்வராக 469 நாட்கள், பிரதமராக 1793 நாட்கள் என ஒட்டு மொத்தமாக இவர் பதவியில் இருந்தது 2261 நாட்கள்.

சமூக நீதிக்கு பெரும்பங்காற்றி மண்டல் கமிஷன் நாயகன் என்று புகழப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங், சுருக்கமாக சொன்னால் வி.பி.சிங் 4வது இடத்தில் இருக்கிறார். இவர். உ,.பி. முதல்வராக 1980ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு வரை 771 நாட்கள் இருந்தார். பின்னர் பிரதமராக 344 நாட்கள் பதவி வகித்தார். இவ்விரு பதவிகளிலும் வி.பி. சிங் இருந்த மொத்த நாட்கள் 1115.

5வது இடத்தில் ஹெச்.டி. தேவகவுடா உள்ளார். கர்நாடக முதல்வராக 1994ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை 538 நாட்களும், பின்னர் பிரதமராக 325 நாட்களும் இருந்தவர். ஒட்டு மொத்தமாக இரு பதவிகளிலும் அவர் இருந்த நாட்கள் 863.

சரண் சிங்கிற்கு 6வது இடம். இவர் உ.பி. முதல்வராக 1967-68 மற்றும் 1970களில் இருந்தார். 555 நாட்கள் முதல்வராகவும், 171 நாட்கள் பிரதமராகவும் இருந்துள்ளார். இரு பதவிகளிலும் மொத்தம் 726 நாட்கள் இருந்துள்ளார்.


ஒட்டு மொத்தமாக சுதந்திர இந்தியாவில் இதற்கு முன் யாரும் படைத்திராத, முதல்வர்+பிரதமர் பதவியில் அதிக நாட்கள் இருந்தவர் பிரதமர் மோடி மட்டுமே. இவர் மொத்தம் 9010 நாட்கள் இவ்விரு பதவிகளிலும் இருந்து சாதித்துள்ளார்.

முன்னதாக, பவன் சாம்லிங் சிக்கிம் மாநில முதல்வராக 8931 நாட்கள் இருந்துள்ளார். இவர் பிரதமராக பதவி வகித்தது இல்லை.