உங்களை சிலருக்கு பிடிக்காமல் போவதற்கான 5 காரணங்கள்
10 ஆனி 2026 புதன் 13:00 | பார்வைகள் : 154
சிலர் உங்களை வெறுப்பதற்கு காரணம் எப்போதும் உங்கள் தவறாக இருக்க வேண்டியதில்லை. பயம், தனிப்பட்ட எல்லைகள், மாறுபட்ட குணாதிசயங்கள் போன்றவற்றின் காரணமாகவும் வெறுப்பை வெளிப்படுத்த செய்யலாம்.
அதை நினைத்து நீங்கள் ஏன் கவலைப்படக் கூடாது என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது
ஒருவர் உங்களை வெறுக்கிறார் என்றால், அதற்கு எப்போதும் நீங்கள் மட்டுமே காரணமாக இருக்க மாட்டீர்கள். நீங்கள் மிகவும் நல்லவராகவும், நேர்மையாகவும், அமைதியான குணமுடையவராகவுமே இருந்தாலும் கூட, சிலருக்கு உங்களை பிடிக்காமல் போகலாம்.
அவர்கள் வெளிப்படுத்தும் எதிர்மறையான உணர்வுக்கு நீங்கள் ஒருபோதும் காரணம் கிடையாது. அது அவர்களுடைய சொந்த பயம், தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றங்கள் அல்லது கடந்த காலக் காயங்களின் வெளிப்பாடு மட்டுமே!
உங்களது நற்குணங்கள் பொறாமையை தூண்டலாம்
உங்களுடைய தன்னம்பிக்கை, ஒழுக்கம் அல்லது திறமை ஆகியவை அவர்களின் பலவீனங்களை ஞயாபகப்படுத்தலாம். உங்களைப் பார்க்கும்போது, "நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே" என்ற ஏக்கம் அவர்களுக்குள் மன அழுத்தம் அல்லது பொறாமையை தூண்டலாம்.
இதனை நிபுணர்கள் social comparison காரணமாக நிகழலாம் என்று கூறுகிறார்கள். அதாவது, மக்கள் தங்களை அறியாமலேயே தங்களது வாழ்க்கை, வெற்றி அல்லது தன்னம்பிக்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள்.
ScienceDirect-ல் வெளியாகியுள்ள ஆய்வின்படி, இத்தகைய ஒப்பீடு பாதுகாப்பற்ற உணர்வு உருவாக்கி மனக்கசப்பு அல்லது தற்காப்பு நடத்தைக்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட எல்லைகள் பிடிக்காமல் போகலாம்
யார் என்ன சொன்னாலும் "சரி" என்று சொல்லாமல், உங்களின் சுயமரியாதைக்காக நீங்கள் நோ என்று சொல்ல தொடங்கும்போது சிலருக்கு அது பிடிக்காது. உங்களுடன் அவர்களுக்கு பிடித்தமாதிரி இருக்க முடியாதபோது அவர்களுக்குள் உங்கள் மீது கோபம் வரலாம். உங்களை வெறுக்க ஆரம்பிக்கலாம்.
மனநலன் மற்றும் சுயமரியாதை பாதுகாக்க "ஆரோக்கியமான எல்லைகள்" அவசியம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கான்சாஸ் பல்கலைக்கழக ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள மனநல வழிகாட்டுதலின்படி, சரியான எல்லைகள் இல்லாதபோது, அது மனக்கசப்பு, மனச்சோர்வு மற்றும் தங்களை மற்றவர்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்கிற உணர்வுக்கு வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களை பற்றி தவறான பிம்பத்தை உருவாக்கியிருக்கலாம்
நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்பதை உங்களிடம் வந்து பழகி தெரிந்துகொள்ளாமல், மற்றவர்கள் சொன்னதை கேட்டு மனதிற்குள் உங்களை பற்றி கற்பனையாக கதையை உருவாக்கியிருப்பார்கள். அந்த கதாபாத்திரத்தை தான் வெறுக்க செய்கிறார்கள். உண்மையான உங்களை அல்ல.
அனைவருக்கும் உண்மையை நிரூபிக்க முயற்சிப்பது உங்கள் பணி கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குணாதிசயங்கள் ஒத்துப்போகாமல் இருக்கலாம்
அனைவரது எண்ணங்களும், குணங்களும் ஒரே மாதிரி இருக்காது. சிலரின் பேச்சு முறை, சிந்தனை அல்லது நகைச்சுவை பணி உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அதேபோல உங்கள் ஸ்டைல் அவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். இது வெறும் குணாதிசய முரண்பாடு மட்டுமே. இதில் யார் மீதும் தப்பு இல்லை.
தனிப்பட்ட வெறுப்பை உங்கள் மீது காட்டலாம்
சிலர் குடும்பத்தில், பணியிடத்தில் அல்லது கடந்த காலத்தில் பெரிய ஏமாற்றம் அல்லது கோபத்தை எதிர்கொண்டிருக்கலாம். அந்த மன அழுத்தத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் இருப்பார்கள். அந்த நேரத்தில் நீங்கள் முன்னால் இருந்தால் உங்கள் மீது வெளிப்படுத்த செய்யலாம்.
இது ஏன் உங்கள் தப்பு கிடையாது?
மற்றவர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பது உங்களின் தகுதியை முடிவு செய்வதில்லை. அது அவர்களின் மன முதிர்ச்சியை மட்டுமே காட்டுகிறது. நீங்கள் தவறானவர் என்று ஆகிவிட மாட்டீர்கள்.
ஒருவருக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், அவர்களிடம் உங்களை நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் உங்களுக்கு இல்லை.
உங்களை நேசிக்கும் மனிதர்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். மற்றவர்களைக் கடந்து செல்லப் பழகுங்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan