மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் - ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல்
10 ஆனி 2026 புதன் 09:12 | பார்வைகள் : 175
அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, ஈரான் மீது அதிகாலை அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று ஏமன் கடற்பரப்பில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது.
ஈரான் தான் தங்கள் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகள் மீட்கப்பட்டதாக தெரிவித்த அவர், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில் அமெரிக்கா, ஈரானின் தென்பகுதி நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் தளங்களை குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக ஈரானின் மிக முக்கிய துறைமுக நகரான பண்டார் அப்பாஸ் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசியுள்ளது.
மேலும் ஈரானின் கடற்படைத் தளங்கள் அமைந்துள்ள கெஷ்ம் தீவிலும் தாக்குதல் நடந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan