புதன்கிழமை SNCF வேலைநிறுத்தம்: TGV, RER, Transilien... போக்குவரத்து பாதிப்புகள்!!
8 ஆனி 2026 திங்கள் 21:05 | பார்வைகள் : 266
ஜூன் 10 புதன்கிழமை, SNCF தொடருந்து நிறுவனத்தில் தொழிற்சங்கங்கள் அறிவித்த ஒருங்கிணைந்த வேலைநிறுத்தம் காரணமாக பிரான்ஸ் முழுவதும் தொடர்ந்தது போக்குவரத்து பாதிக்கப்படும். இது 2024 இறுதிக்குப் பிறகு நடைபெறும் முதல் பெரிய ஒருங்கிணைந்த வேலைநிறுத்தமாகும். தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வு மற்றும் பணியாளர் உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
SNCF வெளியிட்ட தகவலின்படி, புதன்கிழமை சராசரியாக மூன்றில் இரண்டு பங்கு TGV தொடருந்து மட்டுமே இயக்கப்படும். Intercités சேவைகளில் பாதி தொடருந்து மட்டுமே இயங்கும். ரத்து செய்யப்பட்ட தொடருந்து பயணிகளுக்கு பணத்தை திருப்பிச் செலுத்தல் அல்லது இலவசமாக மற்றொரு தொடருந்துக்கு மாற்றும் வசதி வழங்கப்படும்.
பிராந்திய தொடருந்து சேவைகள் மற்றும் குறிப்பாக Île-de-France பகுதியில் இயங்கும் RER மற்றும் Transilien சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாதைக்கும் தொடர்பான விரிவான போக்குவரத்து தகவல்கள் தனித்தனியாக வெளியிடப்பட உள்ளன.
புதிய துணை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், SNCF பொதுக் குழும ஊழியர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. மேலும், தற்போதைய சம்பள உயர்வுகள் பணவீக்கத்தை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை என்பதால், கூடுதல் சம்பள உயர்வுகளையும் அவர்கள் கோருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan