Paristamil Navigation Paristamil advert login

ஜோந்தாமெரியின் உலங்கு வானூர்தி ஓர்லியான் காட்டில் விழுந்து நொறுங்கியது!

ஜோந்தாமெரியின் உலங்கு வானூர்தி ஓர்லியான் காட்டில் விழுந்து நொறுங்கியது!

8 ஆனி 2026 திங்கள் 15:10 | பார்வைகள் : 326


Loiret மாவட்டத்தில் உள்ள Bray‑Saint‑Aignan பகுதியில், ஜோந்தாமெரி தேசியப் படையின் ஒரு உலங்கு வானூர்தி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஓர்லியான் காட்டில் விழுந்து நொறுங்கியது.

விபத்தில்:

ஒரு ஜோந்தாமெரி வீரர் உயிரிழந்தார்

இருவர் காயமடைந்தனர்


காயமடைந்தவர்கள் : பெண் விமானி மற்றும் இயந்திர நிபுணர்


விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது.

இந்த உலங்கு வானூர்தி முதல்நாள் காணாமல் போன ஒரு இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தது. அந்த இளைஞர் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

உள்துறை அமைச்சர் லெரோன் நூனெஸ் (Laurent Nuñez) X தளத்தில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.

«இந்த துயரமான விபத்தால் நான் ஆழ்ந்த துயரத்தில் உள்ளேன். குடும்பத்தினருக்கும் சக வீரர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபங்கள்.»

என  உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


விபத்துக்குப் பிறகு, பெரிய அளவில் மீட்பு நடவடிக்கை

பெரிய அளவில் தீயணைப்பு மற்றும் மீட்பு படைகள் அனுப்பப்பட்டன

காட்டுப் பகுதி அணுக எளிதல்லாததால் பல வாகனங்கள் மற்றும் குழுக்கள் செயல்பட்டன

குற்றவியல் அடையாள நிபுணர்கள் முதல் ஆய்வுகளுக்கா களத்தில் பணியாற்றுகிறார்கள்.

Loiret மாவட்ட மாவட்ட ஆட்சியர் X‑தளத்தில்,

ஜோந்தாமெரி வீரர்களின் தினசரி பணியைப் பாராட்டினார்

«மக்களை பாதுகாக்க தங்கள் உயிரை பணயம் வைக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள்» குறித்து நினைவூட்டினார்

«நாடு அவர்களுக்கு நன்றியும் மரியாதையும் செலுத்த வேண்டும்» என குறிப்பிட்டார்

விசாரணை தொடர்கிறது - விபத்தின் காரணங்களைத் துல்லியமாக கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.