Paristamil Navigation Paristamil advert login

திமுக கூட்டணியும் இல்லை; மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் இல்லை: மார்க்சிஸ்ட்

திமுக கூட்டணியும் இல்லை; மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் இல்லை: மார்க்சிஸ்ட்

8 ஆனி 2026 திங்கள் 12:40 | பார்வைகள் : 170


தமிழகத்தில் தற்போது திமுக கூட்டணியும் இல்லை, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறி உள்ளார்.

அவரது பேட்டி;

தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எடுத்த முடிவே தவிர யாருடையே தூண்டுதலிலோ, ஒப்புதலிலோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இதை நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

சண்முகம் இப்படி சொல்லி இருக்கிறாரே.. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று அவரிடம் (ஸ்டாலினை குறிப்பிடுகிறார்) போய் கேளுங்கள். திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமோ, இல்லையா என்பது இப்போது இல்லை. தற்போது திமுக கூட்டணி என்ற ஒன்றே இப்போது இல்லை.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது இப்போது இல்வை. அதே நேரத்தில் தமிழகத்தின் நலன்சார்ந்த பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவுடன் ஒத்த கருத்துள்ள பிரச்னைகளில் சேர்ந்து நாங்கள் போராடுவோம். இவ்வாறு சண்முகம் பேட்டியின் போது கூறினார்.