திமுக இல்லாத இண்டி கூட்டணி; 23 கட்சிகள் டில்லியில் நாளை ஆலோசனை
8 ஆனி 2026 திங்கள் 07:19 | பார்வைகள் : 163
டில்லியில் நாளை நடக்கும் இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்ககேற்கின்றன.
காங்கிரஸ் தலைமையில் தொடங்கப்பட்ட இண்டி கூட்டணியில் ஆரம்ப காலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. காலப்போக்கில், காங்கிரஸ் கட்சியின் போக்கு பிடிக்காத காரணத்தால் ஒவ்வொரு கட்சியாக விலகி வருகின்றன.
நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகி, பாஜ கூட்டணியில் இணைந்து விட்டார். ஆம் ஆத்மி, லோக்சபா தேர்தலுடன் கூட்டணியில் இருந்து விலகி விட்டது. தமிழக சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் தவெக அரசில் காங்கிரஸ் இணைந்து விட்டது. அதனால் அதிருப்தி அடைந்த திமுக, இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து விட்டது.
மீதமுள்ள மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் டில்லியில் நாளை இண்டி கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 23 கட்சிகள் பங்கேற்கின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். இதுகுறித்து அவரது பதிவு;
ஜூன் 8ம் தேதி டில்லியில் நடக்க உள்ள கூட்டத்தில் 23 கட்சிகள் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளன. சில கட்சிகள் தங்கள் சொந்த காரணங்களினால் கலந்து கொள்ளவில்லை என்பதை வெளிப்படுத்தி இருககின்றன.
லட்சக்கணக்கானோர் ஓட்டுரிமையை பறிக்கும் மத்திய அரசின் கொள்கைகள், தினமும் அரசியலமைப்பை சீர்குலைப்பது, விசாரணை முகமைகள் மூலம் எதிர்க்கட்சிகளை வேட்டையாடுவது, தொடர் விலைவாசி உயர்வு, முதலீட்டு சூழலை முடக்குவது, தேசிய நலனில் சமரசம் செய்து கொள்வது என மக்களுக்கு எதிரான மத்திய அரசின் செயல்களை அவர்களும் எதிர்த்துள்ளனர். நம் நாட்டை போலவே இண்டி கூட்டணியும் அதன் பன்முகத்தன்மை மூலம் ஒற்றுமையாக தொடர்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய சில ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்காமல் முரண்டு பிடித்த மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த நிலையில், இப்போது கூட்டத்தில் பங்கேற்க டில்லி வந்துள்ளார்.
நாளை நடக்கும் இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் மற்றும் லோக்சபாவில் அவர்களுக்கு இருக்கும் எம்.பி.,க்கள் விவரம்
கட்சிகள் - லோக்சபா எம்.பி.,க்கள்
* காங்கிரஸ் - 98
* சமாஜ்வாடி - 37
* திரிணமுல் காங்கிரஸ் - 28
* உத்தவ் சிவசேனா - 9
* தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் பிரிவு) - 8
* ராஷ்டிரிய ஜனதாதளம் - 4
* மார்க்சிஸ்ட் - 4
* முஸ்லிம் லீக் - 3
* ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 3
* இந்திய கம்யூனிஸ்ட் - 2
* மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் - 2
* விசிக - 2
* தேசிய மாநாட்டுக்கட்சி - 2
* மதிமுக - 1
* கேரள காங்கிரஸ் - 1
* ஆர்.எஸ்.பி. -, 1
* ஆர்.எல்.பி., - 1
* பாரத் ஆதிவாசி கட்சி - 1
* கேரள காங்கிரஸ் (எம்) - 0
* பார்வார்டு பிளாக் - 0
* விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி -0
* கோவா முன்னேற்றக்கட்சி -0\
தற்போதைய நிலையில், இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் மொத்தம் 207 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்களில் பெரும்பகுதியினர், கட்சி தலைமையை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தவெக தலைமையிலான அரசில் காங்கிரஸ் கட்சியும் இடம் பெற்றுள்ளது. ஆனால், இண்டி கூட்டணி கூட்டத்தில் தவெக பிரதிநிதிகள் பங்கேற்பார்களா என்பது பற்றி அந்த கட்சி சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan