ட்ரம்பை மொஜ்தபா கமெனி சந்திக்க மாட்டார் - ஈரான் அதிரடி
7 ஆனி 2026 ஞாயிறு 14:10 | பார்வைகள் : 160
ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியை தான் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்தார்.
ட்ரம்பை மொஜ்தபா கமெனி சந்திக்க மாட்டார் என்று ஈரான் தெரிவித்து உள்ளார்.
மொஜ்தபா கமெனியின் மூத்த ஆலோசகர் மொஹ் சன் ரெசாய் அளித்த பேட்டி யில் கூறியதாவது:- ட்ரம்பை மொஜ்தபா கமெனி சந்திக்க வாய்ப்பு இல்லை.
தற்போது நாங்கள் பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்தில் இருக்கிறோம்.
ஆனால் இந்த செயல் முறையை ட்ரம்ப் முடக்கி உள்ளார்.
எனவே அத்தகைய சந்திப்பு நடைபெறாது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பொறுப்பு அமெரிக்காவிடம் உள்ளது. முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரான் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் வெளிப்படையாகக் கூறி வருகிறோம்.
ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கர்கள் உண்மையைச் சொல்லவில்லை.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan