மன்னிப்பு கேட்ட ரவி மோகன்!.
6 ஆனி 2026 சனி 16:28 | பார்வைகள் : 1719
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து இது தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது
. எனவே இது தொடர்பாக ரவி மகனும், ஆர்த்தியும் ஊடகங்களில், பொதுவெளியிலும் பேசக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால் தன்னைப் பற்றி ரவிமோகனின் தோழி கெனிஷா ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பேசக்கூடாது என நீதிமன்றத்தில் ஆர்த்தி வழக்கு தொடர கோபமடைந்த கெனிஷா ‘என் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்துகிறார்கள். நான் ரவி மோகனை விட்டு பிரிகிறேன். நான் என் சொந்த ஊருக்கு செல்கிறேன். இனிமேல் சமூக வலைத்தளங்களில் வரமாட்டேன்’ என்று கோபமாக கூறிவிட்டு சென்றுவிட்டார்..
இதனால் கோபமடைந்த ரவி மோகன் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து மிகவும் கோபமாக பேசினார். ஒரு பெண்ணை சைபர் புல்லிங் செய்து அனுப்பிவிட்டார்கள். எனது மகன்களை பார்க்கவிடவில்லை. இதனால் கைகளை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றேன் எல்லாம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பொது இடங்களில் பேசக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவிட்ட பின்னரும் ரவி மோகன் பேசியிருக்கிறார் என ஆர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தனது கருத்துக்களால் யாரும் மனம் புண்பட்டிருந்தாலோ, வருத்தப்பட்டாலோ அதற்காக வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்வதாக ரவி மோகன் தற்போது தெரிவித்திருக்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire