இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஏர் டிரங்க் நிறுவனம்: பிரதமர் மோடி
6 ஆனி 2026 சனி 11:40 | பார்வைகள் : 1326
இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதுடன் 5 ஜிகாவாட் அளவிலான தரவு மையம் ஒன்றை ஏர் டிரங்க் நிறுவனம் அமைக்க உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பயணம் குறிப்பிடத்தக்க வேகத்தை பெற்று வருகிறது. ஏர் டிரங்க் நிறுவனம்இந்தியாவில் சுமார் ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்யவும், 5ஜிகாவாட் தரவு மையம் அமைக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்புச் சூழலில் முன்மொழியப்படும் அதிகளவிலான முதலீடு இதுவாகும்.
இத்தகைய முதலீடுகள் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ஏஐக்கான சர்வதேச மையமாகும் இந்தியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், உள்ளூர் விநியோக சங்கிலியை பலப்படுத்தி, புதுமையான கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற ஊக்கமளிக்கும்.
உலகத்தின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான எதிர்காலம், இந்தியாவில் வடிவமைக்கப்படுவது அதிகரித்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire