Paristamil Navigation Paristamil advert login

பணி நியமனத்திற்கு லஞ்சம்: முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு

பணி நியமனத்திற்கு லஞ்சம்: முன்னாள் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு

6 ஆனி 2026 சனி 09:32 | பார்வைகள் : 182


முன்னாள் அமைச்சர் நேரு பணி நியமனத்திற்காக லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரில், அமலாக்கத்துறையினர் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், மணிவண்ணன். இவர்களது வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது, காகிதம் மற்றும் மின்னணு வடிவில், 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2024 - -25ம் நிதியாண்டில், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என, 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில், 150க்கும் மேற்பட்டோர், தலா, 25 லட்சம் முதல், 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து, பணி பெற்றதற்கான விபரங்கள், சோத னையின் போது அமலாக்கத் துறைக்கு கிடைத்தன.

இதையடுத்து, பணி நியமனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதால், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுங்கள் என, தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை தரப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27ல் கடிதம் அனுப்பப்பட்டது. அமலாக்கத் துறையிடம், 232 பக்க ஆவணங் களுடன் கூடிய தகவல்களை பெற்ற மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்யவில்லை.  இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.  இருப்பினும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இதனையடுத்து அதிமுக எம்பி இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளார்.

சென்னை ஐகோர்ட் உத்தரவை  மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி, நேரு, முந்தைய திமுக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு ஜூன் 23ம் தேதி  விசாரணைக்கு வர  இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, நேரு தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது.