காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் மாற்றி அமைக்கப்படும்; தமிழக அரசு
6 ஆனி 2026 சனி 06:22 | பார்வைகள் : 1044
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறி உள்ளது.
மது பாட்டில்களை பொறுப்பின்றி துாக்கி எறிவதால், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யும் போது கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கவும், காலி பாட்டிலை திரும்பக் கொடுத்தால் அந்த பத்து ரூபாயை திரும்பத் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவுபடி மலை வாசஸ்தலங்களில் மட்டும் தொடங்கிய இந்த திட்டம், பின்னர் வெவ்வேறு மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கு, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் கூறியதாவது;
3 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக மாற்றி அமைக்க இருக்கிறோம். காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்.
இவ்வாறு விஜய் நாராயண் கூறினார்.
திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் முன்னேற்றம் பற்றி 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire