பன்னீர் குருமா.
5 ஆனி 2026 வெள்ளி 16:40 | பார்வைகள் : 139
குழந்தைகள் ஒழுங்கா சாப்பிடலையா அவங்கள சாப்பிட வைக்க சூப்பரான ரெசிபி இருக்கு, பன்னீர் வச்சு லகோரி பன்னீர் குருமா செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. லகோரி பன்னீர் குருமா என்பது வீட்டில் இருக்க கூடிய பொருட்கள் வைத்து சாப்பிட கூடிய உணவாகும் உள்ளதால் வீட்டில் ஈசியாக செய்யலாம்.
தேவையான பொருட்கள் : பன்னீர், பெரிய வெங்காயம், தக்காளி, வெள்ளை பூண்டு, சீரகம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு.
செய்முறை : முதலில் பன்னீரை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி அடுப்பில் பேன் வைத்து எண்ணெய் ஊற்றிவிட்டு பொறித்து எடுத்து வைக்கவும். இதே பேனில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தினை நீளவாக்கில் நறுக்கிக் பொன்னிறமாகவ பொறித்து வைக்கவும். பொறித்த வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அதில் வெள்ளை பூண்டு மற்றும் தயிர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அதே மிக்ஸியில் இரண்டு தக்காளியை அரைத்து கொள்ளவும்.
பின் பேனில் எண்ணெய் ஊற்றி கொஞ்சம் சீரகம், அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அரைத்து வைத்த மசாலா சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
மிக்ஸ் செய்த பின் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வரை கொதிக்க விடவும். கொதித்த பின் பொறித்த வைத்த பன்னீர் இதில் சேர்த்து நன்றாக மசாலா முழுவதும் படும்படி பெரட்டிக் கொண்டு லகோரி பன்னீர் குருமா ரெடியாகிரும். தோசை, இட்லி, சப்பாத்தி, பொரோட்டோ எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு சாப்பிட்டா டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan