ஜேசன் சஞ்சய் நடிக்க ஆசைப்படுகிறாரா?
5 ஆனி 2026 வெள்ளி 16:31 | பார்வைகள் : 1255
லைகா நிறுவன தயாரிப்பில், முதல்வர் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடித்துள்ள ‛சிக்மா' படம், ஜூலை 31ல் ரிலீஸாகிறது. தமன் இசையமைத்து இருக்கும் சிக்மா ஸ்டைல் என்ற முதல்பாடல் நேற்று மாலை வெளியாகியுள்ளது. அந்த பாடலின் லிரிக்கல் வீடியோவை பார்த்த பலருக்கும் இன்ப அதிர்ச்சி. காரணம், அதில் இயக்குனரான ஜேசன் சஞ்சய் டான்ஸ் ஆடியிருந்தார். அவர் மூவ்மென்ட், தோற்றம், வசீகரம் பலரையும் கவர்ந்துள்ளது.
சில ஆண்டுகளுக்குமுன்பு அவர் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இயக்குனர் ஆனார். விஜய்சேதுபதி உள்ளிட்ட சிலரை அவர் இயக்கப் போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரே சந்தீப் கிஷனை இயக்கினார். இது ப்ரமோ பாடல் போல தெரிகிறது. ஆனாலும், அவருக்கு நடிக்கிற, டான்ஸ் ஆடுகிற ஆர்வம் இருப்பதை இந்த வீடியோ உணர்த்து இருக்கிறது.
சிக்மா படத்தில் ஜேசன் சஞ்சய் நடித்து இருக்கிறாரா? ஒருவேளை அடுத்து சினிமாவில் ஹீரோவாக நடிப்பாரா? என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் இந்த பட விளம்பர நிகழ்ச்சிகள், பேட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அவர் முதல்வரான தனது அப்பா குறித்து பேசுவாரா? அல்லது பர்சனல் கேள்விகள் வேண்டாம் என்று சொல்வாரா? மகன் இயக்கிய படத்துக்கு சிக்மா வெளியாகும் நேரம் முதல்வர் வாழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அந்த பாடலில் பதவி மேல ஆசையில்லை என்ற வரிகள் வருவதும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire