அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி
5 ஆனி 2026 வெள்ளி 15:54 | பார்வைகள் : 1368
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியான வீழ்ச்சியினை இன்றும் (5) பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.27 ரூபாயாக காணப்படுகின்றது.
அதேநேரம் அதன் விற்பனை விலை 342 ரூபாவாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் யூரோ உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று கணிசமாகக் குறைவடைந்துள்ளது.
நாட்டின் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்துள்ள பின்னணியில், சந்தையில் டொலருக்கான தேவை உயர்ந்துள்ளதே இந்தத் தொடர் வீழ்ச்சிக்குக் காரணம் எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire