இலங்கை சென்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
4 ஆனி 2026 வியாழன் 18:39 | பார்வைகள் : 2464
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட, 83 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் மூன்று சீனப் பிரஜைகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் 35, 38 மற்றும் 50 வயதுடைய சீன நாட்டவர்களாவர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 55,800 சிகரெட்டுகளைக் கொண்ட 279 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு 6 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கடத்தி வரப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சிகரெட் தொகையை விமான நிலையத்தின் பச்சை வழியூடாக வெளியே எடுத்துச் செல்ல முயற்பட்ட போதே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire