இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?
4 ஆனி 2026 வியாழன் 16:35 | பார்வைகள் : 1143
ஹிந்தியில் இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கத்தில் அக்சய் குமார் நடித்து வெளிவந்த படம் ' மிஷன் மங்கள்' . இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே அந்த படத்தின் இயக்குனர் ஜெகன் சக்தி நடிகர் தனுஷூக்காக ஒரு கதையை தயார் செய்து அதனை தனுஷை வைத்து உருவாக்குவதற்கான முயற்சியில் இருந்தார். ஆனால், சமீபத்தில் தனுஷுக்கு தயார் செய்த இந்த கதையை நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கூறி, இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துள்ளதால் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
தற்போது ஜெகன் சக்தி, சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது என்கிறார்கள். மேலும், ஜெகன் சக்தி ஹிந்தி படத்தை இயக்கியுள்ளார் என்பதை தாண்டி அவர் தமிழ் இயக்குனர் தான். ஏனெனில் அவர் தமிழில் ஏ. ஆர். முருகதாஸின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire