இளையராஜாவை திட்டும் ரசிகர்கள்!..
4 ஆனி 2026 வியாழன் 16:23 | பார்வைகள் : 1314
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இளையராஜா எப்படி ஒரு வரமோ, அப்படித்தான் எஸ்.பி பாலசுப்பிரமணியமும். இளையராஜாவின் இசையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய அனைத்து பாடல்களுமே ரசிகர்களுக்கு வரப்பிரசாதம்தான். இப்போது கேட்டாலும் மனதை மயக்கும் பாடல்கள் அவை.
இருவரும் இணைந்து எவ்வளவோ இனிமையான பாடல்களை இசை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளிலும் பொருந்தக்கூடிய பல பாடல்களை கொடுத்து மறக்க முடியாத ஒரு நினைவுகளாக இருவருமே இருக்கிறார்கள்..
இந்நிலையில்தான், ஜூன் 4ம் தேதியான இன்று மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். அதில் ‘ஒரு இசையமைப்பாளருக்கு என்ன தேவை என்பதை முழுமையாக புரிந்து அவரின் பார்வையும் முழுமையாக புரிந்து கொண்ட ஒரு பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம். அவரை போல இன்னொருவர் வரவே முடியாது.. அவரை போல காபி கூட அடிக்க முடியாது.. அப்படி ஒரு திறமை வாய்ந்தவர்.. எனது இசையில் 50 ஆயிரம் பாடல்களை பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். அது மிகப்பெரிய ரெக்கார்ட். அவருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தன் குரலிலேயே பேசிய ஆடியோ நோட்டை பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து ‘நீங்க சொல்றது சரி என்றாலும் உங்கள் பாடலை பாடக்கூடாது என்று எஸ்.பி.பிக்கு நீங்கள் நோட்டீஸ் அனுப்பினீர்களே! அது மட்டும் தவறில்லையா? என நெட்டிசன்கள் இளையராஜாவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire