வருமான வரி அறிவிப்பு - இன்று கடைசி நாள்!!
4 ஆனி 2026 வியாழன் 15:37 | பார்வைகள் : 353
Direction générale des finances publiques வெளியிட்ட அறிவிப்பின்படி, 55 முதல் 974 மற்றும் 976 வரை எண்ணிடப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான வருமான வரி அறிவிப்பை இணையம் வழியாக சமர்ப்பிக்க இன்று ஜூன் மாதம் 4ம் திகதி இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் 1 முதல் 19 வரை உள்ள மாவட்டங்களில் வசிப்போர் மற்றும் வெளிநாட்டில் வாழும் பிரெஞ்சு குடிமக்களுக்கு மே 21ம் திகதியும், 20 முதல் 54 வரை உள்ள மாவட்டங்களில் வசிப்போருக்கு மே 28ம் திகதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அச்சு வடிவிலான வரி அறிவிப்பு சமர்ப்பிப்பு மே 19ம் திகதியுடன் நிறைவடைந்தது.
வரி அறிவிப்புகள் முன்கூட்டியே நிரப்பப்பட்டிருந்தாலும், அவற்றை கவனமாக சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும் என நிதி ஆலோசகர் Héloïse Bolle எச்சரித்துள்ளார். குறிப்பாக குடும்பத்தில் உள்ள மாணவர்கள் அல்லது பயிற்சி பணியில் ஈடுபடும் குழந்தைகளின் வருமான விவரங்கள் முழுமையாக பதிவாகாமல் இருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். அத்தகைய வருமானங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வரிவிலக்குக்கு உட்பட்டாலும், அவை கட்டாயம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள் வரி இணையதளத்தை பயன்படுத்துவதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து Collectif français du handicap visuel அமைப்பில் இணைந்த சங்கங்கள், வரித்துறையின் இணையதளம் இன்னும் அணுகல் வசதியற்றதாக உள்ளதாகக் கூறி, பரிஸ் நிர்வாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan