போர்நிறுத்தத்திற்கு மத்தியில் லெபனானில் நீடிக்கும் இஸ்ரேலியத் தாக்குதல்கள்
4 ஆனி 2026 வியாழன் 13:15 | பார்வைகள் : 179
இஸ்ரேல் மற்றும் லெபனான் தங்களின் நிலையற்ற போர் நிறுத்தத்தை புதுப்பிக்கவும், லெபனானுக்குள் ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்குத் தடை விதிக்க பல முன்னோட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உருவாக்கவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
புதன்கிழமை தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்ட பின்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட பகுதிநேர போர் நிறுத்தத்தைச் சோதிக்கும் வகையில் ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை வீசியதற்கு பிறகு குறித்த இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நடைபெற்ற நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் எட்டப்பட்ட இந்த ஒப்பந்தம், தெற்கு லெபனானில் லிட்டானி நதியிலிருந்து எல்லை வரை இஸ்ரேல் கட்டுப்படுத்தும் பகுதியிலிருந்து "அனைத்து இயக்கத்தினரையும் வெளியேற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தது.
"அனைத்து அரசு சாரா அமைப்புகளையும் தவிர்த்து, லெபனான் ஆயுதப் படைகள் அப்பகுதியின் மீது பிரத்யேகக் கட்டுப்பாட்டை உருவாக்குவதற்கு அமெரிக்கா வழிகாட்டும் என குறித்த ஒப்பந்தத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
லெபனானில் எட்டப்பட்ட பகுதிநேரப் போர்நிறுத்த உடன்படிக்கை இருதரப்புத் தாக்குதல்களால் கடுமையான சோதனைக்கு உள்ளாகியிருக்கும் பின்னணியில், விரிவான அமைதி ஒப்பந்தத்தை எட்டும் நோக்குடன் அமெரிக்கா மற்றும் ஈரானியப் பிரதிநிதிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையானது ஹிஸ்புல்லா அமைப்பின் தலையீடற்ற, லெபனானின் பாதுகாப்பிற்கான ஒரு பிரத்யேகச் செயல் திட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தை அறிவிப்பு குறித்து ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, திங்கட்கிழமை எட்டப்பட்ட பகுதிநேர உடன்படிக்கையின்படி, ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தாத பட்சத்தில், தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தாது என லெபனான் அரசு தெரிவித்திருந்தது. அத்துடன் இதற்கு ஹிஸ்புல்லா அனுமதி அளித்துள்ளதாகவும் அரசு கூறியிருந்தது.
ஆனால், லெபனான் அரசின் இந்தக் கூற்றை ஹிஸ்புல்லாவின் அரசியல் குழு உறுப்பினர் மஹ்மூத் கமாட்டி முற்றாக மறுத்துள்ளார்.
"அங்கு எந்தப் போர்நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை, பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான 'தாஹியே' மாவட்டத்திற்கான தற்காலிகப் பாதுகாப்பு மட்டுமே பேசப்பட்டது."என மஹ்மூத் கமாட்டி, தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே, எல்லையைத் தாண்டி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தினால் பெய்ரூட்டின் தாஹியே பகுதியில் மீண்டும் தாக்குதல்களை ஆரம்பிப்போம் என இஸ்ரேலியத் தலைவர்கள் எச்சரித்திருந்தனர். அதற்கமைய, புதன்கிழமையன்று இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பகுதிநேரப் போர்நிறுத்தத்தை முறியடித்துள்ளன.
எல்லையைக் கடந்து வந்த ஹிஸ்புல்லாவின் ட்ரோன் மற்றும் இரண்டு ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் குவிக்கப்பட்டிருந்த பகுதியை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஹிஸ்புல்லா தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் மட்டுமே மத்திய கிழக்கின் இந்த தற்காலிகப் போர்நிறுத்தம் முழுமையான அமைதி ஒப்பந்தமாக மாறுமா என்பது தெரியவரும் என சர்வதேச இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan