காட்மியம் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் சட்டம் – தேசிய சபையில் நிறைவேற்றம்!!
4 ஆனி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 2279
தேசிய சபையில் ஜுன் மாதம் 3ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற அமர்வில், மக்களை காட்மியம் எனப்படும் நச்சுத்தன்மை கொண்ட கனிம உலோகத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சூழலியல் சட்ட முன்மொழிவு முதல் வாசிப்பில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. புற்றுநோய், மரபணு மாற்றம் மற்றும் இனப்பெருக்க பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த உலோகத்துக்கு பிரெஞ்சு மக்கள் அதிகளவில் உபயோகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 ஆதரவு வாக்குகளும் 22 எதிர்ப்பு வாக்குகளும் பெற்று நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், பாஸ்பேட் உரங்களில் உள்ள காட்மியம் அளவை வேகமாகக் குறைக்கும் திட்டத்தை முன்வைக்கிறது. விவசாய நிலங்களில் இந்த நச்சு உலோகம் தேங்குவதற்கு பாஸ்பேட் உரங்களே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அரசாங்கம் மெதுவான குறைப்புத் திட்டத்தை ஆதரித்திருந்த போதிலும், இடதுசாரி கட்சிகள் மற்றும் மத்திய அணிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கின.
இந்த சட்ட முன்மொழிவை கொண்டு வந்த சூழலியல் நாடாளுமன்ற உறுப்பினர் Benoît Biteau, “எங்களை வழிநடத்திய விஞ்ஞானிகளுக்கும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு அல்லாத அமைப்புகளின் செயற்பாட்டாளர்களுக்கும் நன்றி” என சபையில் தெரிவித்தார். தற்போது இந்த சட்டம் மேலதிக பரிசீலனைக்காக செனட் அவைக்கு அனுப்பப்பட உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire