Paristamil Navigation Paristamil advert login

காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட்: முதல்வர் விஜய் அறிவிப்பு

காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட்: முதல்வர் விஜய் அறிவிப்பு

4 ஆனி 2026 வியாழன் 08:49 | பார்வைகள் : 1301


தமிழகத்தில் இருந்து காலியாக உள்ள ராஜ்யசபா சீட் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக  முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ராஜ்யசபா எம்பி ஆக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இதனையடுத்து  சி.வி.சண்முகம் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். காலியாக உள்ள இந்த பதவிக்கான தேர்தல் வரும் 18 ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் த மிழக வெற்றிக்கழகம் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது.

அதேநேரத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியும் ராஜ்யசபா எம்பி பதவியை எதிர்பார்த்தது. நேற்று தலைமைச் செயலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்.

தொடர்ந்து இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்,  முதல்வர் விஜயை சந்தித்து ராஜ்யசபா சீட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக  தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவித்து உள்ளார். வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்,  திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியது.  அக்கட்சியின் கிறிஸ்டோபர்  திலக் எம்பி ஆக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.