கருணைக் கொலைச் சட்டம்: தேசிய சபைக்கு இறுதி அதிகாரம்!!
2 ஆனி 2026 செவ்வாய் 21:41 | பார்வைகள் : 1808
வாழ்நாள் இறுதிக்கால நோயாளிகளுக்கான “கருணைக்கொலை” வழங்கும் சட்ட முன்வரைவில் தேசிய சபை உறுப்பினர்களும் செனட் உறுப்பினர்களும் ஒருமித்த முடிவுக்கு வரத் தவறியுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்ட கூட்டு சமரசக் குழு (CMP) இன்று ஜுன் மாதம் 2ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வையும் எட்டவில்லை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Olivier Falorni முன்வைத்த இந்த சட்டம், குறிப்பிட்ட இறுதிக்கட்ட நோயாளிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் உதவி மரணம் பெறும் உரிமையை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. தேசிய சபை இதனை இருமுறை ஆதரித்து நிறைவேற்றியிருந்தாலும், செனட் அவையைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரண்டு முறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இரு அவைகளிலும் மீண்டும் விவாதிக்கப்பட்ட பிறகு, இறுதி தீர்மான அதிகாரம் தேசிய சபைக்கு வழங்கப்படும் என பாராளுமன்ற உறவுகள் அமைச்சர் Laurent Panifous தெரிவித்துள்ளார். இதற்கான இறுதி வாக்கெடுப்பு ஜூலை 15ம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire