கர்நாடகாவில் மீண்டும் எழும் அதிகார சண்டை; துணை முதல்வர் பதவிக்கு வாரிசுகள் போட்டி
3 ஆனி 2026 புதன் 07:32 | பார்வைகள் : 912
கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் ஜூன் 3 புதன்கிழமை பதவி ஏற்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள், துணை முதல்வருக்கான போட்டி பூதாகரமாகி இருக்கிறது.
கர்நாடகாவில் காங்., மேலிடம் தலையிட்டதால், முதல்வர் மாற்றம் சுமுகமாக முடிந்து இருக்கிறது. சித்தராமையா - டி.கே.சிவக்குமாருக்கு இடையே நீண்ட காலமாக நீடித்து வந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் புதன்கிழமை பதவியேற்கவுள்ளார். இந்தச் சூழலில், துணை முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையாவின் இளைய மகன் யதீந்திராவுக்கும் காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங் கார்கேவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
சித்தராமையாவின் மகன் யதீந்திரா 2018ல் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்தவர். தந்தை சித்தராமையாவின் வருணா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். 2024ல் சட்ட மேல்சபை உறுப்பினராக பொறுப்பேற்றார். அதன் பின், திரைமறைவில் இருந்தபடி கட்சியை பலப்படுத்துவதிலும், தந்தையின் அரசியல் நகர்வுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.
இதனால், சித்தராமையாவின் ராஜினாமாவுக்கு பின், அமைச்சரவையிலோ அல்லது அதிகார மையத்தின் முக்கிய பொறுப்பிலோ அவர் அமரவைக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்தன.
அதே போல், கர்நாடக காங்., முகாமில் பிரியங் கார்கேவும் தனக்கென தனி செல்வாக்கை உருவாக்கி இருக்கிறார். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனான பிரியங், 2013ல் முதல் முறையாக சித்தாபூர் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வான பிரியங், காங்., அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பம், ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து இருக்கிறார்.
யதீந்திராவை போல அல்லாமல், பிரியங் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். ஏற்கனவே, அமைச்சர் பதவியை வகித்தவர் என்பதால், மக்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். இதனால், தன் குடும்ப செல்வாக்கை மீறி, தனி அரசியல் அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இது தவிர, துணை முதல்வர் பதவி என்றாலே, பட்டியல் இனத்தவருக்கு தான் தர வேண்டும் என காங்., கட்சியில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. அந்த வகையிலும், பிரியங் கார்கே பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், துணை முதல்வர் போட்டியில் இவரது பெயர் பலமாக அடிபடுகிறது.
எனினும், இந்த தருணத்தில், சித்தராமையாவின் அதிருப்தியை சம்பாதித்து கொள்ளக் கூடாது என்பதில் காங்., மேலிடம் உறுதியாக உள்ளது. இதனால், இருவரையுமே துணை முதல்வர் பதவியில் அமர வைக்கலாமா என்ற யோசனையில் காங்., மேலிடம் மூழ்கி இருக்கிறது.
ஒன்றுக்கும் மேற்பட்ட துணை முதல்வர்கள் பதவி உருவாக்கப்படுமானால், நீண்ட நாள் கனவுடன் முதல்வராக பதவியேற்கவுள்ள டி.கே.சிவக்குமாருக்கு அது பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire