முதல்வர் விஜயுடன் காங் மூத்த தலைவர் சிதம்பரம் பேசியது என்ன?
3 ஆனி 2026 புதன் 06:32 | பார்வைகள் : 827
முதல்வர் விஜயை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த சி.வி.சண்முகம், சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் போட் டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, தன் எம்.பி., பதவியை, அவர் ராஜினாமா செய்தார்.
அந்த பதவிக்கான தேர்தல், வரும் 18ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில், த.வெ.க., நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அதனால், வேட்பாளர் தேர்வில், முதல்வரும், த.வெ.க., தலைவருமான விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.
அதேநேரத்தில், த.வெ.க., ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியும், ராஜ்யசபா எம்.பி., பதவியை எதிர்பார்க்கிறது. த.வெ.க., - காங்கிரஸ் கூட்டணியை ஏற்படுத்த காரணமாக இருந்த, காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, அந்த பதவியை கைப்பற்ற காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து, இது தொடர்பாக 15 நிமிடங்கள் வரை பேசினார். இந்த சந்திப்பில் பேசியது என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire