Paristamil Navigation Paristamil advert login

முட்டை சமோசா

முட்டை சமோசா

2 ஆனி 2026 செவ்வாய் 16:10 | பார்வைகள் : 130


சமோசா செஞ்சு சாப்பிடுவது போல் அதில் முட்டை சேர்த்து சாப்பிட்டால் அதனுடன் சுவை சூப்பராக இருக்கும். சமோசா வேண்டாம்னு சொல்லுற குழந்தை கூட விரும்பி சாப்பிட முட்டை வச்சு சமோசா செஞ்சு கொடுங்க அடிக்கடி கேட்பாங்க..

தேவையான பொருட்கள்: முட்டை, மைதா மாவு, சோம்பு, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா, சீரகத்தூள், உப்பு, எண்ணெய்.

குழந்தைகள் சாப்பிட சூப்பராக ஸ்நாக்ஸ்.. முட்டை சமோசா செஞ்சு கொடுங்க..
செய்முறை: தேவையான அளவு முட்டை எடுத்து அதனை குக்கரில் வைத்து அவித்து எடுக்கவும். அவித்த பின் தோலை நீக்கி துருவி வைக்கவும். பேனில் எண்ணெய் ஊற்றி பேன் சூடானதும் சோம்பு சேர்த்து பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிய சேர்த்து கொண்டு வதக்கி கொள்ளவும்.

குழந்தைகள் சாப்பிட சூப்பராக ஸ்நாக்ஸ்.. முட்டை சமோசா செஞ்சு கொடுங்க..
பின் பெரிய வெங்காயம் நிளவாக்கில் வெட்டி விட்டு வதக்கி கொண்டு இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து விட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா, சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

குழந்தைகள் சாப்பிட சூப்பராக ஸ்நாக்ஸ்.. முட்டை சமோசா செஞ்சு கொடுங்க..
துருவி வைத்த முட்டை சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா எடுத்து அதில் உப்பு, எண்ணை தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொண்டு சப்பாத்திக்கு தேய்ப்பது போல் நன்றாக உருட்டிக் கொண்டு ஆறு பாகமாக வெட்டவும் அதில் மசாலாவை வைத்து சமோசாவின் முக்கோண வடிவத்தில் மூடிக்கொள்ளவும்.

குழந்தைகள் சாப்பிட சூப்பராக ஸ்நாக்ஸ்.. முட்டை சமோசா செஞ்சு கொடுங்க..
பின் அடுப்பில் பேன் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக பொறித்து எடுத்தால் சூப்பரான டேஸ்ட்டில் முட்டை சமோசா ரெடியாக இருக்கும். முட்டை சாப்பிடாத குழந்தைகள் கூட நன்றாக இந்த முட்டை சமோசாவை சாப்பிடுவாங்க.