டென்னிஸ் விளையாட்டிற்கு திரும்பிய செரீனா வில்லியம்ஸ்
2 ஆனி 2026 செவ்வாய் 14:30 | பார்வைகள் : 145
உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டிற்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தன்னுடைய 44வது வயதில் மீண்டும் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டிற்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
HSBC சாம்பியன்ஷிப் தொடரில் ஜூன் 8, 2026ம் ஆண்டு லண்டனின் புகழ்பெற்ற குயின்ஸ் கிளப்பிற்காக செரீனா வில்லியம்ஸ் மீண்டும் களமிறங்குகிறார்.
வைல்டு கார்டு முறையின் மூலம் செரீனா வில்லியம்ஸ் இரட்டை பிரிவில் களமிறங்கிய உள்ளார்.
2022ம் ஆண்டு தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டிற்கு திரும்பியுள்ள செரீனா, கனடாவின் இளம் வீராங்கனை விக்டோரியா எம்போகோவுடன் இணைந்து விளையாட உள்ளார்.
தன்னுடைய வருகை குறித்து பேசிய செரீனா, நீண்ட இடைவெளிக்கு பிறகு, புதிய அத்தியாயத்தை தொடங்க குயின்ஸ் கிளப் சிறந்த இடம் என்று தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த மைதானங்களில் ஒன்றில் மீண்டும் விளையாடுவதை எண்ணி உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan