எபோலாவுக்கு எதிராக 3 புதிய தடுப்பூசிகள்
2 ஆனி 2026 செவ்வாய் 15:03 | பார்வைகள் : 168
கொங்கோவில் தற்போது 250 க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ள 'புந்திபுகியோ' எனப்படும் அரிய வகை எபோலா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, உலக அளவில் மூன்று புதிய தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள எபோலா அச்சுறுத்தலானது வரலாற்றிலேயே மிக மோசமான ஒன்றாக மாறக்கூடும் என சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முன்முயற்சி அமைப்பு எச்சரித்துள்ள பின்னணியில் இந்த அவசர மருத்துவ நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொற்றுநோய்களுக்கான ஆயத்தப் பாடுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி என்ற சர்வதேச அமைப்பின் நிதி உதவியுடன் மூன்று பிரதான நிறுவனங்கள் தனித்தனி தொழில்நுட்பங்களில் இந்தத் தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன.
அதன்படி, கொவிட் பெருந்தொற்றின் போது பயன்படுத்தப்பட்ட தங்களது சொந்த விசேட தடுப்பூசி தொழில்நுட்பத்தின் மூலம் புதிய எபோலா தடுப்பூசியை ஒக்ஸ்போர்ட் தயாரித்து வருகிறது. இந்தத் தடுப்பூசி இன்னும் 2 முதல் 3 மாதங்களுக்குள் மருத்துவப் பரிசோதனைக்குத் தயாராகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனமான மொடர்னா, கொவிட் காலத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட தங்களது 'mRNA' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புந்திபுகியோ வைரஸை வீழ்த்தும் தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.
எபோலாவின் பொதுவான வகையான 'சயார்' (Zaire) வைரஸுக்கு ஏற்கனவே இருக்கும் தடுப்பூசியை, புதிய 'புந்திபுகியோ' வகைக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. குரங்குகளில் நடத்தப்பட்ட சோதனையில் இது 100% பாதுகாப்பை வழங்கியுள்ள போதிலும், மனிதர்களுக்கான பரிசோதனைக்குத் தயாராக இன்னும் 7 முதல் 9 மாதங்கள் எடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது கொங்கோவில் எபோலா தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 1,000 ஐக் கடந்துள்ளதுடன், அண்டை நாடான உகாண்டாவிலும் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆயுத மோதல்கள் நிலவும் மற்றும் போதிய சுகாதார வசதிகள் இல்லாத பகுதிகளில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், கடந்த 2014-16 காலப்பகுதியில் மேற்கு ஆபிரிக்காவில் 11,000 க்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்த உலகப் பெரும் எபோலா பேரிடரைப் போல இதுவும் உருவெடுக்கலாம் என்ற அச்சம் மருத்துவ உலகினரிடையே எழுந்துள்ளது.
"இந்தத் தொற்றுநோய் வேகமாகப் பரவி வருவதாலும், இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இல்லாததாலும், இந்த உயிராபத்துமிக்க நோய்க்கு எதிரான பந்தயத்தில் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது " என தொற்றுநோய்களுக்கான ஆயத்தப் பாடுகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான அமைப்பின் தலைமை நிர்வாகி வைத்தியர் ரிச்சர்ட் ஹட்செட் தெரிவித்துள்ளார்.
எபோலா வைரஸில் மொத்தம் 6 வகைகள் உள்ள போதிலும், 3 வகைகள் மட்டுமே பெருந்தொற்றை ஏற்படுத்தக்கூடியவை. தற்போது பரவி வரும் 'புந்திபுகியோ' வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இல்லை.
தற்போது தயாரிக்கப்படும் 3 புதிய தடுப்பூசிகளும் வைரஸின் மேற்பரப்பில் உள்ள 'புந்திபுகியோ கிளைகோபுரோட்டீன்' என்ற கட்டமைப்பைக் கண்டறிந்து அழிக்கும் வகையில் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தயார்படுத்துகின்றன.
இது பாதிப்பில்லாத ஒரு உயிருள்ள வைரஸில் எபோலா கிளைகோபுரோட்டீனைப் புகுத்தி உடலுக்குள் செலுத்துகிறது. உடல் அந்தப் பாதிப்பில்லாத வைரஸுடன் போராடி எபோலாவைத் தோற்கடிக்கக் கற்றுக்கொள்கிறது.
இவை மரபணு குறியீட்டின் ஒரு பகுதியை உடலுக்குள் செலுத்தி, உடலையே புந்திபுகியோ கிளைகோபுரோட்டீனை உருவாக்க வைக்கின்றன. உடல் அதனைப் புறம்பான ஒன்றாகக் கருதி தாக்கத் தொடங்குவதன் மூலம் எபோலாவுக்கு எதிரான பலத்தைப் பெறுகின்றது.
இப்புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பானது தற்போதைய பரவலைக் கட்டுப்படுத்துவதுடன், எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும் உலகிற்குப் பெரும் பக்கபலமாக அமையும் எனஉலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை பணிப்பாளர் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசுஸ் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan