Paristamil Navigation Paristamil advert login

லெபனானுடன் கருத்து வேறுபாடும் இல்லை - இஸ்ரேல் அமைச்சர்

லெபனானுடன் கருத்து வேறுபாடும் இல்லை  - இஸ்ரேல் அமைச்சர்

23 சித்திரை 2026 வியாழன் 14:41 | பார்வைகள் : 150


அமெரிக்காவில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் இன்று (23) நடைபெறும் சூழலில், இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியான் சார் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார்.

“லெபனானுடன் எங்களுக்கு எந்தவிதமான தீவிர கருத்து வேறுபாடுகளும் இல்லை. தீர்க்கப்படக்கூடிய சில சிறிய எல்லைப் பிரச்சினைகளே உள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி மற்றும் இயல்புநிலைக்கு தடையாக இருப்பது ஹிஸ்புல்லா மட்டுமே” என்று இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பை ஆயுதமற்ற அமைப்பாக மாற்றுவதே பிராந்திய அமைதிக்கு வழிவகுக்கும் என்றும், இதற்கு லெபனான் அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “லெபனான் அரசாங்கத்துக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். உங்கள் மண்ணில் ஹிஸ்புல்லா கட்டியெழுப்பியுள்ள பயங்கரவாத அரசுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்த ஒத்துழைப்பு எங்களை விட உங்களுக்குத்தான் மிகவும் தேவைப்படுகிறது. இதற்கு தார்மீகத் தெளிவும், இடர்களை எதிர்கொள்ளும் துணிவும் தேவை" என்றார்.

லெபனான் நாட்டின் இறையாண்மைக்கு ஹிஸ்புல்லா ஒரு தடையாக இருப்பதாக இஸ்ரேல் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.

ஹிஸ்புல்லாவின் ஆயுதங்கள் களையப்பட்டால் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர அமைதி சாத்தியம் என்றும் இஸ்ரேல் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லெபனான் மண்ணில் ஈரானின் தலையீட்டைத் தடுக்க லெபனான் அரசு முன்வர வேண்டும் என இஸ்ரேல் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ஒருபுறம் சர்வதேச மட்டத்தில் காணப்படுகிறது.