Hyundai அறிமுகப்படுத்தியுள்ள புதிய IONIQ 3 எலக்ட்ரிக் கார்
23 சித்திரை 2026 வியாழன் 14:31 | பார்வைகள் : 189
Hyundai நிறுவனம் Milan Design Week 2026-இல் தனது புதிய IONIQ 3 மின்சார ஹாட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
“Aero Hatch” எனப்படும் புதிய வடிவமைப்பில் வந்துள்ள இந்த மொடல், அதிகப்படியான ஏரோடினமிக் திறன் மற்றும் பல interior வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது..
IONIQ 3, Hyundai-யின் Art of Steel வடிவமைப்பு தத்துவத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் முன்புறம் தாழ்வாகவும், கூரை நேராகவும், பின்புற spoiler-இல் இணையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பின்புற பயணிகளுக்கும் கூடுதல் headroom மற்றும் வசதி கிடைக்கிறது.
Standard Range - 42.2 kWh, WLTP range- 344 km
Long Range - 61 kWh, WLTP range- 496 km
DC fast charging-ல் 29 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.
AC charging- ல் 11 kW V2X (Standard) மற்றும் 22 kW V2X வரை விருப்பமாக வழங்கப்படுகிறது.
Top speed: 170 km/h
9.0 முதல் 9.6 விநாடிகளில் மணிக்கு 0 முதல் 100 km வேகத்தை எட்டும் திறன் கொண்டது.
காரின் உட்புற வசதிகளாக Flat-floor layout, 5-seat comfort, 441 லிட்டர் boot space, Megabox storage, Relaxation Seats, BOSE Premium Sound System, ambient LED lighting ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
IONIQ 3-இல் Pleos Connect infotainment system (Android Automotive OS) அறிமுகமாகியுள்ளது. 12.9 இன்ச் அல்லது 14.6 இன்ச் display, Hyundai Digital Key 2, Plug & Charge, Vehicle-to-Load (V2L) வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Hyundai SmartSense driver assistance, Highway Driving Assist 2, Remote Smart Parking Assist, Blind-Spot View Monitor, Surround View Monitor ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
IONIQ 3 துருக்கியில் தயாரிக்கப்பட்டு, ஐரோப்பிய சந்தையை இலக்காகக் கொண்டு விற்பனைக்கு வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan