தமிழக சட்டசபை தேர்தல்; காலை 9 மணி நிலவரப்படி 17.69% ஓட்டுப்பதிவு
23 சித்திரை 2026 வியாழன் 06:21 | பார்வைகள் : 1738
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (ஏப்ரல் 23) 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 17.69% ஓட்டுப்பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 2.80 கோடி, பெண் வாக்காளர்கள் 2.93 கோடி, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 பேர். முதல் முறை வாக்காளர்கள், 14.5 லட்சம் பேர்.
மாநிலம் முழுவதும், 33,133 இடங்களில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 1.06 லட்சம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் களத்தில், 234 தொகுதிகளில், 4,023 வேட்பாளர்கள் உள்ளனர்.
17.69% ஓட்டுப்பதிவு
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழகம் முழுவதும் காலை 9 மணி நிலவரப்படி 17.69% ஓட்டுப்பதிவாகி உள்ளது.
நாகையில் 17.51%,
கோவையில் 18.02% ,
கடலூரில் 14.82%,
திருநெல்வேலியில் 15.9%,
மதுரையில் 17.32%,
திருச்சியில் 18%,
அரியலூரில் 16%,
செங்கல்பட்டில் 17%
ஓட்டுப்பதிவாகி உள்ளது.
மாலை 6 மணி வரை மக்கள் ஓட்டளிக்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan