விழிப்புடன் இருப்பது அவசியம்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
23 சித்திரை 2026 வியாழன் 08:29 | பார்வைகள் : 1137
தமிழகத்தில் எதிரிகளுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் இடமில்லை; தேர்தலில் விழிப்புடன் செயல்படுங்கள் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம்:
5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பயன் தந்திருப்பதாலும், பாஜ தலைமையில் அதிமுக மற்றும் சில கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியால், அதன் மத்திய அரசால், தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாலும், அடிமை அதிமுகவுக்கும் அதனுடன் உள்ள கட்சிகளுக்கும் ஓட்டளித்தால் அது நேரடியாக பாஜவுக்கு போடும் ஓட்டு தான் என்பதை உணர்ந்திருப்பதாலும், பீஹாரைப் போல தமிழகத்தையும் பாஜ பின்வாசல் வழியாக கபளீகரம் செய்துவிடும் என்பதாலும், பாஜ தலைமையில் அதிமுக இணைந்துள்ள கூட்டணியை முறியடித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே ஓட்டளிப்போம் என்பதே தமிழக வாக்காளர்களின் உறுதியான முடிவு.
மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். தமிழகத்தின் எதிரிகளுக்கும் அவர்களின் அடிமைகளுக்கும் இங்கே இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நம் அரசியல் எதிரிகள் பரப்புகின்ற அவதூறுகளைத் தமிழக மக்கள் புறந்தள்ளி, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்குத்தான் ஓட்டளிக்க வேண்டும் என்ற உறுதியையும் மேற்கொண்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வெளிப்பட்ட திமுகவினரின் அயராத உழைப்பு, ஓட்டுப்பதிவு நாளான ஏப்ரல் 23ம் தேதியன்றும் விழிப்புடன் தொடர்ந்திட வேண்டும்.
வாக்குச்சாவடி முகவர்கள் (பூத் ஏஜெண்ட்டுகள்) ஓட்டுப்பதிவு நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். பூத் ஏஜெண்ட்டுகள் எக்காரணத்தை முன்னிட்டும், ஆரம்பத்திலேயே தேர்தல் அதிகாரி கொடுக்கும் 17Cல் கையொப்பமிடக் கூடாது. ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் சரிபார்த்த பிறகே, கையொப்பம் இட்டு நகல் பெற வேண்டும். \u003cbr
ஓட்டுப்பதிவு நேரம் முடிவடையும் தறுவாயில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுவதை உறுதிசெய்து, பின்பு CU பட்டனில் Close என்று தேர்தல் அதிகாரி அழுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் படிவம்17C உள்ளிட்ட அனைத்துப் படிவங்களிலும் தேர்தல் அதிகாரியுடன் சேர்ந்து கையொப்பம் இடவேண்டும்.
வாக்குச்சாவடியில் திமுகவினர் கண்ணியமான முறையிலும், கவனமான வகையிலும் தங்கள் பணியை மேற்கொண்டு, நமக்கு ஆதரவான ஒரு ஓட்டு கூட விடுபடாதபடி செயல்பட வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் என்பது தமிழகத்தின் வளர்ச்சி தொடர்வதற்கான திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான களம்.
தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கான களம். தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்பவர்களையும் அவர்களுக்குத் துணை போகிறவர்களையும் ஒரு சேர வீழ்த்துகிற களம். வெற்றி நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே; ஒன்றாக விழிப்புடன் பணியாற்றி வெல்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan