பிரதமர் குறித்து விமர்சனம்: கார்கேவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
23 சித்திரை 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 1106
பிரதமர் மோடியை பயங்கரவாதி என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள தேர்தல் கமிஷன், அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதுடன், 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நேற்று அவர் பேட்டியளித்தபோது, மோடியை 'பயங்கரவாதி' என குறிப்பிட்டார். அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அதற்கு கார்கே விளக்கம் அளித்தார். இதற்கு பாஜ தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, அர்ஜூன்ராம் மேவால் ஆகியோர் கார்கே மீது தேர்தல் கமிஷனில் புகார் அளித்தனர்.
இதன் பிறகு கிரண் ரிஜிஜூ கூறியதாவது:
பிரதமர் குறிப்பிட்ட கட்சிக்கானவர் அல்ல. அவர் நாட்டின ஒட்டு மொத்த மக்களுக்கானவர். 140 கோடி மக்களின் ஆசி பெற்றவர். மக்களின் ஒட்டு பெற்று பிரதமர் பதவியேற்றுள்ளார். அப்படிப்பட்டவரை பார்த்து பயங்கரவாதி என கார்கே கூறுகிறார். இது காங்கிரஸ் கட்சியின் மனநிலையை வெளிப்படுத்தி உள்ளது. இவ்வளவு தரம் தாழ்ந்து யாரும் இதுவரை எந்த பிரதமரையும் விமர்சித்தது இல்லை. இப்படிப்பட்ட வார்த்தைகளை தேர்தல் கமிஷன் அனுமதிக்கக்கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் கூறியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
பிரதமரை பார்த்து பேசியவர் சாதாரணநபர் அல்ல. தேசிய கட்சியின் தலைவர், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர். இவ்வளவு பொறுப்பு மிக்க பதவி வகிக்கும் கார்கே, நண்பர்கள் மத்தியில் பேசவில்லை. தேர்தல் நடக்கும் மாநிலத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படி பேசுகிறார். பஹல்காம் தாக்குதல் நடந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனக்கூறுபவர் மோடி. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அவரது தலைமையில் மத்திய அரசு எடுத்து வருகிறது. அப்படிப்பட்ட பிரதமரை பற்றி கார்கே இப்படி பேசியது கண்டனத்திற்குரியது. தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள தேர்தல் கமிஷன், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தனது விமர்சனம் குறித்து 24 மணி நேரத்திற்குள் கார்கே விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan