பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஸ்டீவன் ஸ்மித் அதிரடி- முல்தான் சுல்தான்ஸ் அசத்தல் வெற்றி
22 சித்திரை 2026 புதன் 13:59 | பார்வைகள் : 1292
PSL 2026 போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராவல்பிண்டிஸை வீழ்த்தியது.
கராச்சியில் நடந்த PSL 2026 போட்டியில் ராவல்பிண்டிஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ராவல்பிண்டிஸ் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்தது. டேர்ல் மிட்செல் 46 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாசினார்.
தியான் ஃபோர்ரெஸ்டர் 15 பந்துகளில் 37 ஓட்டங்களும், சாம் பில்லிங்ஸ் 20 பந்துகளில் 29 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் ஸ்டீவன் ஸ்மித் அதிரடியில் மிரட்டினார்.
சாஹிப்ஸதா பர்ஹான் 20 ஓட்டங்களும், ஜோஷ் பிலிப் 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்க, ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) 56 (31) ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.
அணித்தலைவர் ஆஸ்டோன் டர்னர் ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 37 ஓட்டங்கள் விளாச, முல்தான் சுல்தான்ஸ் அணி 18.4 ஓவர்களில் 167 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire