ரூ.8 ஆயிரம் கூப்பன் திட்டத்திற்கு முதல் கையெழுத்து: முதல்வர் ஸ்டாலின்
22 சித்திரை 2026 புதன் 11:33 | பார்வைகள் : 165
திமுக ஆட்சிக்கு வந்ததும், ரூ. 8 ஆயிரம் கூப்பன் வழங்கும் இல்லத்தரசி திட்டத்திற்கு முதல் கையெழுத்து போட உள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் பிரசாரத்தின் போது பேசியதாவது:ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் முதல்வராக இருந்தாலும், சென்னை நான்பாசமாக வளர்த்த குழந்தை போன்றது. நான் அந்தளவிற்கு உங்களுடன் ஒன்றி போயிருக்கிறேன். சென்னை மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் மேயராக இருந்துள்ளேன். பல கனவுகளோடு நான் உருவாக்கிய திட்டங்களால் வளர்ந்திருக்கும் மாநகரம்.
அதில், கொளத்தூர் எனது செல்லக்குழந்தை. பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைகளை உங்களுடன் கொண்டாடி இருக்கிறேன். முதல்வர் பொறுப்பில் இருப்பதினால், நான் தமிழகம்முழுக்க சுற்று பயணம் சென்றாலும், பத்து நாள்ஒரு முறை கொளத்தூர் வராமல் என்னால் இருக்க முடியாது.
ஒரு வாரம் ஆனாலே, சேகர்பாபுவிடம் எப்போது தொகுதிக்கு போகலாம். என்ன வேலை நடக்கிறது என கேட்பேன். தேர்தல் அறிவித்த உடன் வேட்புமனு தாக்கல் வந்தேன். பிறகு கடைசி நாள் உங்களிடம் ஓட்டு கேட்க வந்துள்ளேன். அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துள்ளேன். நான் செய்து கொடுத்த நலப்பணிகள் தான் எனக்காக ஓட்டு கேட்கிறது.
மற்ற வேட்பாளர்களுக்காக ஓட்டு கேட்டாலும், எனது தொகுதியில் மொத்தமாகவே ஒரு மணி நேரம் கூட முக்கால் மணிநேரம் சுற்றி உள்ளேன். நீங்களே நான் ஓட்டு கேட்டுவர வேண்டும் என எதிர்பார்க்க மாட்டீர்கள். கொளத்தூர் மக்கள் என்மீது காட்டும் அன்பு அப்படிபட்டது. ஆண்டுதோறும் நன்றாக படித்தமாணவன், தேர்வுக்கு முன்பு திருப்பி பார்த்தது போன்று, இந்தாண்டு கடுமையாக உழைத்துள்ளேன். இத்னை ஆண்டு உங்களுக்காக உழைத்துள்ளேன். நான் செய்ததிட்டங்கள் எனக்காக ஓட்டு கேட்கும்.
மாடல் தொகுதியாக கொளத்தூரை மாற்றி உள்ளேன். இன்னும் உயர்ந்த கொளத்தூராக மேம்படுத்துவேன். மற்ற ஊர்களை விட சென்னைக்கு நிறைய திட்டங்களை கொண்டு வருவது போன்று இருக்கிறது என கூறுவார்கள். நான் அனைத்து ஊர்களையும் சமமாக பார்க்கிறேன் அனைத்து மாவட்டங்களையும் மக்கள் தொகைக்குஏற்ப செய்து கொடுக்கிறேன்.
கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக சென்னை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. மாநிலத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தால் கூட சென்னை வளர வேண்டும் என்றால் திமுக வேண்டும் என்று சென்னையின் தீர்ப்பு திமுக பக்கம் இருக்கும்.
பழிவாங்கும் விதமாக சென்னையை பாராவிதமாக வைத்து. தவிக்க விட்ட ஆட்சிதான் அதிமுக ஆட்சி. சின்ன வெள்ளத்திற்கே தவிக்க விட்ட ஆட்சி அதிமுக ஆட்சி. புதிதாக எந்த பணியையும் செய்யாமல் முந்தைய திமுக அரசு செய்த கட்டமைப்புகளை சீர்குலைத்துவைத்தனர். சென்னையை தேங்கவும், வளர்ச்சியை ஏங்கவும் வைத்துள்ளனர்.
சென்னையுடன் வளர்ச்சியில் சரிசமமாக இருந்த மாவட்டங்கள் வளர்ச்சி பெற்றன . கடந்த ஐந்தாண்டுகளில் மேம்பாலங்கள், மெட்ரோ, பூங்காக்கள், நூலகங்கள் என நிறைய இப்படி உருவாக்கிய இடத்தை சென்று பார்த்து ரீல்ஸ் போடுகிறார்கள். அதை எல்லாம் பார்க்கும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படாத சென்னைக்கு தலைநகருக்கு உரிய கவனம் செலுத்தி இப்போதுதான் நிமர்ந்துள்ளது. சிறந்த தலைநகரமாக மாற்றி உள்ளோம்.
சிறந்த உட்கட்டமைப்பு,கல்வி, தமிழகம் , மருத்துவம், தொழில் முதலீடு,ச ட்டம் ஒழுங்கு, அமைதி மதநல்லிணக்கத்துக்கும் தமிழகம் தான். எல்லாவற்றுக்கும் உழைத்து வருகிறேன். இது எதையும் நினைத்து செய்யவில்லை. செய்யும்போது பல சோதனை வந்தது. இயற்கை பேரிடர் ஒருப க்கம், தமிழகத்துக்கான நிதி தராமல் மத்திய அரசு கொடுமை, கவர்னர் மூலம் நெருக்கடியை தாண்டி சாதனை செய்துள்ளோம்.
தமிழகத்தில் நிறைவேற்றிய திட்டங்கள் அனைத்தும் மற்ற மாநிலங்களுக்கும் உதாரணமாக உள்ளது. பாஜவால் சட்டசபை தேர்தலில் தோற்றோம், அவர்களுடன் கூட்டணி இல்லை என்று சொன்னவர் இபிஎஸ்.
இரண்டு ரெய்டு நடந்ததும், பயந்துபோய் கர்ச்சீப்பால் முகத்தை மறைத்து டில்லியில் கூட்டணி வைத்துள்ளார். கூட்டணிக்கு அவரும் தலைமை இல்லை. இவர் குடுமி டில்லியிடம் உள்ளது. அனைத்துமுடிவுகளும் அங்கிருந்து எடுக்கப்படுகிறது. இல்லத்தரசி என்ற திட்டத்தை பார்த்து புலம்புகின்றனர். இத்திட்டத்தின் கீழ் 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்போகிறோம். ஆட்சி அமைந்ததும் இல்லத்தரசி திட்டத்திற்கு தான் முதல் கையெழுத்து போட உள்ளேன்.
2031 ல் ஓட்டு கேட்டு நான் தான் வருவேன். நிச்சயம் வருவேன். மீண்டும் வருவேன். இது எனது சத்தியம். சிறியவயதில் என்னை சுற்றி இருந்ததும், தெரிந்ததும் அரசியல் மட்டும் தான்.
கருணாநிதியை பார்க்க அண்ணாதுரை, எம்ஜிஆர்உள்ளிட்டோர் வருவர். அப்படிபார்த்ததால் மக்கள் பணி செய்யும் ஆர்வம் சின்ன வயதில் வந்தது. எம்ஜிஆர், என்னிடம், சின்ன வயதில் கட்சி வேலை பார்க்கிறாய். படிப்பில் கவனம் செலுத்து . நான் உன் பெரியப்பாவாக சொல்கிறேன் என அறிவுரை கூறினார்.
அவர் கூறியபடி படித்து முடித்தாலும் அரசியல் ஆர்வம் குறையவில்லை. வீட்டிலும் எனது அரசியல் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மிசா சட்டத்தில் கைதாகி ஒரு வருடம் சென்னை சிறையில் அடைக்கப்பட்டேன். கருணாநிதி மகன் என்ற காரணத்துக்காக கைது செய்யவில்லை. கட்சி பிரசாரத்துக்காக கைது செய்யப்பட்டேன். அடிமட்டத்தில் இருந்து அடக்கு முறைகளுக்கு எதிராக போராடி உழைத்து அடிஉதைபட்டு அரசியலுக்கு வந்தேன். இன்று அந்த தழும்புகள் எனதுஉடலில் இருக்கின்றன.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan