Paristamil Navigation Paristamil advert login

பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்? ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி

22 சித்திரை 2026 புதன் 10:26 | பார்வைகள் : 166


தன்னை “அப்பா” என்று அழைக்க விரும்புகிறார். அவரும் ஒரு மகளைப் பெற்ற தந்தை தான். இருந்தும் அவருக்கு தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்? என முதல்வர் ஸ்டாலினுக்கு  அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ்  கேள்வி எழுப்பி உள்ளார்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி  திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது வாலிபர்கள் சிலரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.  இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக இபிஎஸ்   வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே 15 வயது சிறுமி 8 மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம்- இவை பற்றி கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நான் பேசாத நாள் இல்லை. உண்மையில் மக்கள் மீது அக்கறையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால், பெண்களை இந்த அரசு பாதுகாத்து இருக்கும்.

ஆனால்  ஸ்டாலினின் கடந்த 5 ஆண்டுகால நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவோ, முன்னேறவோ கூடாது என்பது தான் அவரது மனநிலையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

தன்னை “அப்பா” என்று அழைக்க விரும்புகிறார். அவரும் ஒரு மகளைப் பெற்றத் தந்தை தான். இருந்தும் அவருக்கு தமிழகப் பெண்களின் கண்ணீரும் கதறலும் கேட்காமல் போனது ஏன்?

தமிழக மக்களே-உங்கள் முன்னே இருக்கும் கேள்வி ஒன்று தான்…

உங்கள் பிள்ளைகளை, குறிப்பாக பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமா?

ஆம் எனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை, வரும் ஏப்ரல் 23 அன்று அதிமுக சின்னத்தில் உங்கள் வாக்கை செலுத்துவது தான்!

உங்கள் வாக்கு தான் உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றப் போகும் ஆயுதம்! அதை முறையாகப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரின் சகோதரனாக, என் குடும்பத்தில் ஒரு தந்தையாக, தாத்தாவாக இருக்கும் நான் உங்களைக் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்களை, பெண்களை காப்பது தான் எனது முதல் பணி!  சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் போதைப்பொருள் புழக்கத்தை மூன்றே மாதங்களில் ஒழித்துக் கட்டுவேன்!ஒரு தாய் எப்படி தன் பிள்ளைகளைக் காப்பாரோ,ஜெயலலிதா எப்படி தமிழகத்தைக் காத்தார்களோ, அதேபோல், உங்கள் தமையனாக இருந்து அதிமுக  அரசு உங்களைக் காக்கும்! இதுவே நான் தமிழக மக்களுக்கு அளிக்கும் சத்தியவாக்கு! இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.