Paristamil Navigation Paristamil advert login

தேர்தல் முடிவுக்கு பின் கட்சியை காப்பாற்ற மோடி, அமித் ஷா காலில் திமுக விழும்: விஜய் பேச்சு

தேர்தல் முடிவுக்கு பின்  கட்சியை காப்பாற்ற மோடி, அமித் ஷா காலில் திமுக விழும்: விஜய் பேச்சு

22 சித்திரை 2026 புதன் 05:14 | பார்வைகள் : 202


இந்த சட்டசபை தேர்தலில் திமுக தோற்பது உறுதி என சென்னையில் நடந்த பிரசாரத்தின் போது விஜய் பேசினார்.

சென்னையில் நடந்த கூட்டத்தில் விஜய் பேசியதாவது:

மிக மிக முக்கியமான நேரத்தில் இருக்கிறோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப போகும் தேர்தலின் கடைசி பிரசாரம். ஸ்டாலின் சாரை வீட்டுக்கு அனுப்பப்போகும் அந்த தேர்தலின் கடைசி பிரசாரம். இப்படிப்பட்ட ஒரு ஆட்சியை, மக்களை சுத்தமாக கண்டுகொள்ளாத ஆட்சியை , தலைவரை, கட்சியை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தலின் கடைசி பிரசாரம். இப்படிப்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்?

எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். பொய் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டு அவரின் வாழ்க்கையை உயர்த்தினார். மக்களின் வாழ்க்கையை எப்படி உயர்த்தினார் தெரியுமா? வீட்டுவரி, குடிநீர்வரி, தொழில் வரி, விலைவாசி உயர்த்திவிட்டார். குப்பைக்கும் வரி போட்டார். மக்களின் கஷ்டங்களை மட்டும் உயர்த்திவைத்து உள்ளார். இன்னும் பல படி சென்று, தமிழகத்தில் எந்த அரசும் வாங்காத கடனை உயர்த்தி வைத்துள்ளார். 5.5 லட்சம் கடன் கோடி வாங்கி உள்ளார். இத்தனை கோடி கடன் வாங்கி எவ்வளவு செய்திருக்கலாம். இளைஞர்களின் கல்விக்கடனை ரத்து செய்திருக்கலாம்.

விக்கிரவாண்டியில் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜ என்று சொன்னோம். அதில் இருந்து மாறவில்லை. ஹிந்து முஸ்லிம், கிறிஸ்தவர், என்பது அவர்களின் வழிபாட்டு முறை. வாழ்க்கை முறையில் மட்டும் தான். ஆனால், தமிழகம் ,ஒற்றுமை என வந்துவிட்டால் நம்மிடம் யாரும் வாலாட்ட முடியாது. நம்முடைய நல்லிணக்கத்தை யாராலும் நாசம் செய்ய முடியாது என்று கூறினோம். அன்றையில் இருந்து அந்த நிலைப்பாட்டில் இருந்து ஒரு இஞ்ச் கூட மாறவில்லை.

மதசார்பற்ற சமுக நீதி கொள்கை தான் நமது கொள்கை. அதில் இருந்து மாற போவதில்லை. 100 சதவீதம் இந்த விஷயத்தில் விஜயை நீங்கள் நம்பலாம். ஹிந்து,முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான ஆளாக விஜய் எப்போதும் இருப்பேன். எம்மதமும் நம்மதம் அப்படி என்ற உண்மையின் முகம் தான் விஜயின் முகம்.

சிங்கம் தனி வந்தாலும், தண்ணி காட்டிடும். இதை முரட்டு நம்பிக்கையில் கூறவில்லை. உலகம் முழுதும் கடவுள் கொடுத்துள்ள நம்மாட்கள் மீதான நம்பிக்கையில் சொன்னேன். விஜய் ஒன்று கூறனால், அதில் இருந்து மாறமாட்டேன். ஸ்டாலின் போன்று கிடையாது.

சிறுபான்மையினர் ஓட்டை வாங்குவதற்காக ஒரு பக்கம் கோடிக்கணக்கில் செலவு செய்து தமிழக காங்கிரசை தனது பைக்குள் போட்டுக் கொள்வது. மறுபக்கம் கட்சியை காப்பாற்ற பாஜவுடன் மறைமுக கூட்டணியில் இருக்க வேண்டியது. ஒரு பக்கம் கதர் வேஷம். மறுபக்கம் காவி வேஷம் போட வேண்டியது.

பாஜவுக்கும், திமுகவுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது. 2 வருடத்திற்கு முன்பு சொன்னேன். அன்றைக்கு கூறியது. இன்று இந்தியா முழுதும் எதிரொலிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா இதனை தான் சொன்னார். ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டு சொன்னார். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார். மக்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். இந்த தேர்தலில் திமுக தோற்பது உறுதி

ஸ்டாலின்  தோல்விக்கு பிறகு என்ன நடக்கும் எனக்கூறுகிறேன். கட்சியை காப்பாற்ற வேண்டும் ஏகப்பட்ட வழக்கு உள்ளது. லஞ்ச வழக்கு,திருட்டு, ஊழல் வழக்கு,  குடும்பம், அமைச்சர்கள் மீது வழக்கு உள்ளது. காப்பாற்றிக் கொள்ள, மோடி, அமித்ஷா காலில் திமுக விழும். சிறுபான்மை சகோதரர்களுக்கு அன்றைக்கு தெரியும். திமுகவின் சாயம் அன்றைக்கு வெளுக்கப்போகிறது.அது மட்டும் இல்லாமல், பாஜவின் முதல் அடிமை யார் என்ற போட்டி வேறு. நீயா... நானா.. என  திமுகவுக்கும் மற்றும் பலருக்கும். சிறுபான்மை சகோதரர்களோடு விஜய் கூட நிற்பேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இப்போது சமீபத்தில் காமெடி நடக்கிறது. ஸ்டாலினும், மற்றும்பலரும் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கடுப்பில் விட்ட கணிப்பை விடுகின்றனர். அதில் திமுக 300, மற்றும் பலர் 700 தொகுதிகளில் வெற்றி பெறும் என்கின்றனர். இவ்வளவு தொகுதி எங்குள்ளது. குருட்டாம்போக்கில் அடித்து விடுவது. தில்லுமுல்லுவுக்கு அளவே இல்லை. 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விஜய்க்கு ஓட்டுப்போடுவார்களாம். 50 க்கு மேற்பட்டவர்கள் போனால் போகிறது என்று விஜய் போடுவார்களாம். 40 வயதுக்குள்ள வாக்காளர்கள் மிகவும் குறைவாம்.50 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்கள் குறைவாம். அவர்கள் விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டார்களாம்.

இப்படி பில்டப் மேல் பில்டப். ஓங்கி மண்டையில் குட்டுவது போன்று தேர்தல் கமிஷன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், 40 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் 2 .37 கோடி. 50 வயதுக்கு உட்பட்டவர்களையும் சேர்த்தால் 3.65 கோடி. அதில்,  பெண்கள் மட்டும் 1.77 கோடி பேர்.  எங்கே போனீர்கள். கடுப்பில் விட்ட கணிப்பாளர்களே எங்கு போனீர்கள்.

கடுப்பில் விட்ட கணிப்பாளர்களுக்கு ஒரு கேள்வி. 60,70 வயதில் இருக்கும் எனது அம்மா, அப்பா, தாத்தா அனைவரும், நம்ம வீட்டு பிள்ளை விஜய் என சொல்வது உங்கள் காதில் விழவில்லை. இந்த உண்மையை சொல்ல வேண்டாம் என இரண்டு பேரும் நன்றாக கவனித்து அனுப்பினார்களா? கருத்துக்கணிப்பு, கடுப்புக்கணிப்பு என்ன விட்டாலும், திமுகவும், மற்றும் பலரும் மண்ணை கவ்வப்போவது உறுதி. அவர்களின் ஆட்சி கனவு, லஞ்ச, ஊழல்,கொள்ளையடிக்கும் கனவு அனைத்தும் கதம் கதம் தான்.

சமீபத்தில் புதுச்சேரி தேர்தலில் 90 சதவீதத்துக்கு மேல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 100 சதவீதத்துக்கு மேல் ஆகியிருக்கும். அதே மாதிரி ஓட்டுப்பதிவு தமிழகத்தில் நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள். மக்களே உங்களை கையெழுத்து  கேட்கிறேன். ஸ்டாலினிடம் இருந்து தமிழகத்தையும், ஜனநாயகத்தை காப்பாற்றி ஆக வேண்டும். என்ன வேலை நெருக்கடியாக இருந்தாலும் வெளியூராக இருந்தாலும், என்ன வேலையாக இருந்தாலும் எந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டு இருக்கிறதோ அங்கே வந்து விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போடுங்கள். விஜய்க்கு ஓட்டுப்போடுங்கள். இந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து பணம் செலவு செய்து ஓட்டுப்போட வந்த எனது நண்பா நண்பிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்து ஏதாவது ஒரு பிரச்னை என்றால் விஜய் வெளியே வர மாட்டார் என மற்றும்பலர் கட்சியில் இருப்பவர், பத்துமுறை தோற்றவர், இன்னமும் திருந்தாத ஒருவர் கூறுகிறார். அனுபவசாலி அவர்களே,  உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். சேலம் பக்கத்தில் உள்ள தொகுதியில் மட்டும் நின்று வெற்றி பெற முடியுமா? முதலில் நிற்க முடியுமா?முதலில் அதை செய்துவிட்டு, பிறகு விஜயை பற்றி பேசுங்கள். சும்மா நச...நச...வென.

சொந்த தொகுதியில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் நமதுசின்னத்தையே திருடியவர். அதனால் தான் நமது மன்றத்தில் பல வருடங்களாக பயணித்த சுயேச்சை வேட்பாளர் சின்னத்தை நமது ஆரவணைத்து ஆதரிக்கிறோம். எடப்பாடி மக்களே, சுயேச்சை வேட்பாளரின் டிவி சின்னத்தில் ஓட்டுப் போடுவது நமது விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போடுவது போன்று. தயவு செய்து எடப்பாடி மக்கள் மறந்துவிட வேண்டும்.

திமுகவுக்கும், மற்றும்பலருக்கும் பொதுவான  உரிமையாளர் பாஜவின் மந்திரி, விஜய் ஒரு நடிகன் எனக்கூறுகிறார்.  ஆமாம்நான் நடிகன்தான். யார்  இல்லை எனக்கூறினால். இவர் புதிதாக கண்டுபிடித்தது போன்று. ஆனால், அரசியலுக்கு வந்துவிட்டு நடிக்கவில்லை. அரசியலில் நடிக்கவில்லை. ஆனால், அரசியலில் இருந்து கொண்டு, நாடகம் போடுகிறீர்களே. உங்களை நாடக நடிகர்கள் என சொல்லலாமா? மத்திய அரசின் அதிகாரத்தை வைத்துக் கொண்டு, திமுகவோடு ஒரு நாடகம், மற்றும்பலரோடு  ஒரு நாடகம் போடும் உங்களை அபாயகரமான நாடக கம்பெனி என சொல்லலாமா?

பாஜ  உடன் சரண்டராக இருப்பதுடன் இல்லாமல், இந்த ஊழலில் ஊறிப்போய் இருக்கும் இரண்டு பேரும் வேண்டாம். புதிதாக நல்லாட்சி, மாற்றத்தை கொடுக்கக்கூடிய தவெகவை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டு வருவோம்.  கொண்டாடுவோம். இது மாற்றத்துக்கான தேர்தல். மாறி மாறி ஓட்டுப்போட்டுக் கொள்வது மாற்றத்திற்கான தேர்தல் அல்ல.

புதிய நபருக்கு ஓட்டுப்போடுவது மாற்றம். போகி பண்டிகை அன்று,  வீணா போனதை தூக்கி எறிவோம். அதேபோன்று இந்த ரே்தலில் 75 ஆண்டு பவள விழா பாப்பாவையும், 55 ஆண்டு பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி எறிவோம். புது நிர்வாகம், சிறந்த நிர்வாகத்தை கொண்டு வரலாமா? திமுக, மற்றும்பலர், பாஜவுக்கு ஓட்டுப்போடுவது என்பது பாஜவுக்கு  ஓட்டுப்போடுவதற்கு சமம்.

அனைவரும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஒருவனை எதிர்க்கின்றனர். அதற்கு என்ன காரணம்? ஏன் அப்படி எதிர்க்க வேண்டும். அவரவர் தனித்தனி கூட்டணியில் இருந்து எதிராக இருப்பவரை எதிர்ப்பார்கள். ஆனால்,ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கின்றனர். இதற்கு என்ன காரணம்?. ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து ஒரே கூட்டணியில் இருக்கின்றனர்.

என்ன தப்பு பண்ணிவிட்டேன் ? மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தவறா? நல்லாட்சி கொடுக்க வேண்டும் என நினைத்தது தவறா? ஊழலை செய்யக்கூடாது என நினைத்தது தவறா? லஞ்சமே வாங்கக்கூடாது என நினைத்தது தவறா? பெண்களுக்கு பாதுகாப்பு ஒழுங்காக இருக்க வேண்டும் என நினைத்தது தவறா ?  போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என நினைத்தது தவறா? சட்டம் ஒழுங்கை சரி செய்ய நினைத்து தவறா? விவசாயிகள், மீனவர்கள், உழைக்கும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்  என நினைத்தது தவறா? மக்களே,  நல்லா இருப்போம். நல்லா  இருப்போம். அனைவரும் நல்லா இருப்போம்.

எனது குட்டி நண்பா, நண்பீஸ்க்கு வேண்டுகோள் .விஜய்க்காக, விஜய் வெற்றி பெற வேண்டும் என்பதற்கா, தமிழகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வீட்டில் இருக்கும் அம்மா அப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா , அண்ணா, அக்கா என  ஓட்டுப்போடும் வயதில் இருக்கும்  அனைவரிடமும்  விசில் சின்னத்துக்கு ஓட்டுபோட  வேண்டும் என சொல்லுங்கள்.  ஓட்டுப்போடாமல் இருப்பவர்களின் காதில் அன்பாக விசில்  ஊதி  ஓட்டுப்போட வையுங்கள். விசிலுக்கு ஓட்டுப்போடும் வரை விட வேண்டாம்.  இப்படி தான் இருக்கப்போகிறது தேர்தல்.

கூட்டணி கணக்கு எல்லாம் தூள்தூளாகிவிட்டது. கணக்கு, அரித்மெட்டிக்ஸ் தூள்தூளாகிவிட்டது. ஓட்டுக்கு பணம் கொடுத்து சத்தியம் எல்லாம்  பொய் சத்தியம். பொய்யர்கள் வாங்கும் சத்தியம். இதனை நம்ப வேண்டாம். பாஜ வந்துவிடும் என்ற பூச்சாண்டி  சுத்தமா எடுபடாது.பாசிசம் சக்தி சுத்தமாக எடுபடாது. மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். திமுகவும் வேண்டாம் மற்றும் பலரும் வேண்டாம். முக்கியமாக பாஜ வேண்டவே வேண்டாம்.சர்வே எதுவும் நம்பாதீர்கள்.

ஸ்டாலின், தேர்தலுக்கு பிறகு, தோற்ற பிறகு எப்படி எல்லாம் வருத்தப்படப்  போகிறார்  என சொல்லவா ஏன்டா இந்த விஜயை பாடாய் படுத்தினோம்? ஏன்டா இந்த விஜயை  வேதனைபடுத்தினோம் ?ஏன்  விஜய்க்கு எதிராக சதி, சூழ்ச்சி செய்தோம் என  நினைத்து நினைத்து  வருத்தமடைய  போகிறீர்கள். மக்களே உங்களை  வருத்தப்பட செய்ய வைப்பார்கள்.உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? உங்கள் சாப்பாட்டில் மண்ணை அள்ளிப்போட்டேனா?  உங்கள் ஆட்சியில் லட்சணம், உங்களின் ஊழல், நீங்கள், அமைச்சர்கள் அடிக்கும் கொள்ளையை  எடுத்து சொன்னேன். இதை சொல்லாமல் வேறு எதையும் சொல்வேன்.

கரூர் விஷயத்துக்கு வருகிறேன். கரூரில் என்ன நடந்தது என கரூர் மக்களை கேட்டால் புட்டுப்புட்டு வைப்பார்கள். ஏன்மேல் பழியைதூக்கி போடுகிறீர்களே? நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இந்த விஷயத்தில் எல்லாம் அரசியல் செய்ய மாட்டோம் என வீடியோ வெளியிட்டு விட்டு, சட்டசபையில் லேட்டாக வந்தேன் என என் மேல் பழியை தூக்கி போடுகிறீர்களே.  போலீஸ் கொடுத்த நேரத்தில் அங்கு இருந்தேன். நாமக்கல் முதல் கரூர் வரை இருக்கும் மக்களை அனைவரையும் அம்போ என விட்டு வர முடியுமா? நாமக்கல்லில் இருந்து கரூரில் எப்படி வந்தேன் , என உலகமே ' லைவ் 'பார்த்து கொண்டு இருந்தது. வாய் கூசாமல் என் மேல் பழியை தூக்கி போடுகிறீர்கள்?

நீங்கள் தான் ஒன்றும் செய்யவில்லையே. பிறகு ஏன் 20 ஆண்டாக கரூரில் மட்டுமே, கரூர் பகுதியில் போட்டியிட்ட உங்களின் ஒரு அடிமையை  ஏன் கோவை வரை ஓட வைத்தீர்கள்.  அதனால் மக்களே, அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக நீதி கேட்க வந்த விஜய் உங்களிடம் நீதி கேட்கிறேன்.எப்படி வழங்க வேண்டும். நாளை மறுநாள் ஏப்.23ல் விசில் சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். பொய் சொல்ல ஏமாற்ற மாட்டேன்.

நாலுமுனை போட்டி, நாற்பது முனை போட்டி என எத்தனை முறை உருட்டினாலும் இங்கு ஒன்று திமுக. மற்றொன்று தவெக. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா? மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா?

தேர்தல் முடிவு வரும் மே 4  ஸ்பெஷல் தினம் என ஸ்டாலின் சொன்னார். அன்று கத்தரி வெயில் துவங்கும் நாள்.  அந்த கத்தரி வெயில் மண்டையை பிளக்கும். அது மக்களுக்கு ஆகவே ஆகாது. நல்ல விஷயங்களை கத்தரி வெயிலில் செய்ய மாட்டார்கள். எப்போது சூரியன் மறையும் , சூரியன் ஒழியும் என குழந்தைகள், பெரியவர்கள் சூரியனை வெறுத்து ஒதுக்குவார்கள்.ஓம் சக்தி,  பராசக்தி. திமுக ஒரு தீயசக்தி. அந்த தீய சக்தியை தமிழக மக்களும் ஓட ஓட விரட்டி முற்றுப்புள்ளிவைக்கும் நாள் மே 4. இவ்வாறு விஜய் பேசினார்.