Paristamil Navigation Paristamil advert login

இறால் சட்டி சோறு

இறால் சட்டி சோறு

21 சித்திரை 2026 செவ்வாய் 16:21 | பார்வைகள் : 169


கடல் உணவுகளில் இறால் மீனை பிடிக்காதவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. ஏனென்றால் இறாலில் சமைக்கப்படும் இறால் கிரேவி, குழம்பு, வறுவல் என அனைத்தும் சுவையும் அசத்தலாக இருக்கும். இதுபோல் இறால் வாங்கும் போது வீட்டில் குழம்பு வைக்க முடியாத நேரத்தில் இறால் சட்டி சோறு சமைச்சு சாப்பிட்டு பாருங்க அதோட டேஸ்ட்க்கு அடிமையா ஆகிருவீங்க.

வதக்கிய பின் சுத்தம் செய்து வைத்த இறாலை சேர்த்து மூடிவைத்து விட்டு கொதிக்க விடவும். கொதித்து வந்தபின் கொத்தமல்லி, மிளகு தூள் மற்றும் எழுமிச்சை சாறினை சேர்த்து பிரட்டி விட்டு அதில் சோறு, மிளகு தூள் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறால் கிரேவி முழுவதும் சோறில் படும்படி பிசைந்தால் நாவில் எச்சி ஊற வைக்கவும் சுவையில் இறால் சட்டி சோறு சூப்பரா ரெடியாகி இருக்கும்.

தேவையான பொருட்கள்;-இறால், எண்ணெய், பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், குண்டு மிளகாய், முந்திரி, சிறிய வெங்காயம், தக்காளி, எழுமிச்சை பழம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு பொடி, மல்லித்தூள், உப்பு, நெய்.

குழம்பு வைக்கும் மண் சட்டி அல்லது குழம்பு பாத்திரம் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, ஏலக்காய், கருவேப்பிலை, நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், இரண்டு குண்டு மிளகாய், முந்திரி ஆகியவற்றை சேர்த்து விட்டு நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

செய்முறை:-இறால் மீனை சுத்தம் செய்து தோல் மற்றும் குடலை நீக்கி கொள்ளுங்கள். குடல் நீக்கமால் அல்லது சிறிதளவு குடலுடன் சமைத்தால் கூட கசப்பாக மாறிவிடும் அதனால் குடல் நீக்குவதில் கவனம் செலுத்தி குடலை நீக்க வேண்டும்.

பின் நறுக்கிய சிறிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து கொண்டு வேகும் வரை வதக்கி கொள்ளவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு நன்றாக வதக்கவும்