கருப்பு படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியது ஏன்?
21 சித்திரை 2026 செவ்வாய் 16:15 | பார்வைகள் : 1865
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கருப்பு. கிராமத்து ஆக் ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு இசையமைக்க ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் சாய் அபயங்கர் ஒப்பந்தமானார். கருப்பு படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் வெளியேறியது ஏன்? என்று சாய் அபயங்கரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார்.
அதில், கருப்பு படத்தில் இசையமைக்க என்னை ஒப்பந்தம் செய்தபோது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. சூர்யா நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மூலம் சிறந்த இசையை கொடுத்து தனித்திறமையை வெளிப்படுத்திவிட வேண்டும் என்று ஆர்வமாக கமிட்டானேன். ஆனால் எனக்கு முன்பே ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் கமிட்டாகி வெளியேறி இருந்தார் என்ற தகவல் கிடைத்தது. என்றாலும் அவர் எதற்காக வெளியேறினார் என்பது குறித்து யாரும் என்னிடத்தில் தெரிவிக்கவில்லை.
அதையடுத்து இந்த படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசினேன். அதற்காக நீங்கள் இந்த கருப்பு படத்திற்கு இசையமைப்பதால் எனக்கு எந்த பிரச்னை இல்லை என்று கூறினார். அதன் பிறகுதான் இந்த படத்தில் முழு ஈடுபாடு காட்டி இசையமைக்க தொடங்கினேன். மேலும் இந்த படம ஆன்மீக கலவையுடன் உருவாகியுள்ளது. இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire