தேர்தல்பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு முடிகிறது!; நாளை மறுநாள் ஓட்டு போட தயாராகுங்கள்
21 சித்திரை 2026 செவ்வாய் 12:20 | பார்வைகள் : 165
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் நடக்க உள்ள 152 தொகுதிகளிலும், இன்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரும் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல், 23ம் தேதியும்; இரண்டாம் கட்ட தேர்தல், 29ம் தேதியும் நடக்க உள்ளன.
தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிப்பை, தேர்தல் கமிஷன் மார்ச் 15ல் வெளியிட்டது.
புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் இம்மாதம் 9ல் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரும் 23ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.Gallery
தமிழக தேர்தல் களத்தில் 3,579 ஆண்கள்; 443 பெண்கள்; ஒரு திருநங்கை என, 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கொளத்துார் தொகுதியிலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி இடைப்பாடி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
ரொக்கமாக கவனிக்கும்' பணி
அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், வேட்பாளர்கள், கொளுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இறுதி கட்ட பிரசாரத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களை, 'கவனிக்கும்' பணி, அனைத்து தொகுதிகளிலும் நடந்து வருகிறது. ரொக்கமாக 500 முதல், 5,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இது தவிர, தங்க நாணயம், மூக்குத்தி, வெள்ளி கொலுசு, வீட்டு உபயோக பொருட்கள், வேட்டி, சேலை என இலவச பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு, வரும் 23ல் தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு, வரும் 29ல் தேர்தல் நடக்கிறது. இங்கு, திரிணமுல் காங்கிரஸ், பா.ஜ., - கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என, நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
ஐந்து மாநில தேர்தல்களில் பதிவான ஓட்டுகளும், மே 4ல் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:
* சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும். இன்று மாலை 6:00 மணியிலிருந்து, ஓட்டுப்பதிவு முடியும் வரை, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது
* தேர்தல் தொடர்பான எந்த விஷயத்தையும், திரைப்படம், 'டிவி' ரேடியோ, வாட்ஸாப், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடக்கூடாது. எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு தகவல் தொடர்புக்கும் இது பொருந்தும்
* தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர், இன்று மாலை 6:00 மணிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும்
* திருமண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும்
* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர் அனுமதி மற்றும் வாகன அனுமதி, இன்று மாலைக்கு மேல் செல்லாது
* ஓட்டுப்பதிவு நாளன்று வேட்பாளர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு ஒரு வாகனம்; தேர்தல் ஏஜன்டுகள் பயன்பாட்டிறகு ஒரு வாகனம்; தேர்தல் ஏஜன்ட் பணியாளர் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan