ரிங்கு சிங்கின் அதிரடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் வெற்றி
20 சித்திரை 2026 திங்கள் 11:22 | பார்வைகள் : 1704
ஐபிஎல் 2026 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஈடன் கார்டனில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 155 ஓட்டங்கள் எடுத்தது. வைபவ் சூர்யவன்ஷி 46 (28) ஓட்டங்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 39 (29) ஓட்டங்களும் எடுத்தனர்.
அபாரமாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி, கார்த்திக் தியாகி தலா 3 விக்கெட்டுகளும், சுனில் நரைன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. அதிரடி காட்டிய கிரீன் 13 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசினார்.
ரோவ்மன் பௌல் 23 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 70 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் என தடுமாறியது.
அப்போது களமிறங்கிய ரிங்கு சிங் ருத்ர தாண்டவம் ஆடினார். அனுகுல் ராய் அவருடன் கைகோர்க்க அணி வெற்றிப்பாதையை நோக்கி பயணித்தது.
கடைசி ஓவரில் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 34 பந்துகளில் 53 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசினார்.
அனுகுல் ராய் ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 29 ஓட்டங்கள் விளாசினார். ஜடேஜா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நடப்பு தொடரில் 7வது போட்டியில் விளையாடிய கொல்கத்தா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire