ஐபிஎல்லில் புதிய வரலாறு படைத்த ஷ்ரேயாஸ் ஐயரின் படை
20 சித்திரை 2026 திங்கள் 11:19 | பார்வைகள் : 1570
ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற பெருமையை, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் படைத்தது.
நியூ சண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் 2026 போட்டியில், பஞ்சாபி கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸில் ப்ரியான்ஷ் ஆர்யா 93 (37) ஓட்டங்களும், கூப்பர் கொனோலி 87 (46) ஓட்டங்களும் விளாச, அந்த அணி 254 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயெண்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 43 (23) ஓட்டங்களும், மார்க்ரம் 42 (22) ஓட்டங்களும் எடுத்தனர்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் பஞ்சாப் அணியின் 5வது வெற்றியாகும்.
ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்தது.
இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ், 5 வெற்றிகளை பெற்றுள்ளது மற்றும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire