ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்: பிரெஞ்சு கப்பல் மீது துப்பாக்கிச் சூடு!
20 சித்திரை 2026 திங்கள் 07:31 | பார்வைகள் : 3532
ஹோர்முஸ் நீரிணையில் சென்றுகொண்டிருந்த பிரெஞ்சு கடல் போக்குவரத்து நிறுவனம் CMA CGM-க்கு சொந்தமான கப்பல் மீது எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் ஏப்ரல் 19ம் திகதி அன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என நிறுவனம் குறுகிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
International Maritime Organization (IMO) வெளியிட்ட தகவலின்படி, குறித்த கப்பல் ஒரு கண்டெய்னர் கப்பலாகும், மேலும் அது துப்பாக்கிச் சூடு தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் சேதத்தின் அளவு குறித்து விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தனது Truth Social தளத்தில், ஈரான் படைகள் பிரெஞ்சு கப்பலையும், ஒரு பிரிட்டிஷ் சரக்கு கப்பலையும் இலக்காகக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதன் பின்னர், அந்த வழியாகச் செல்ல முயன்ற வணிக கப்பல்கள் மீது ஈரான் படையினரால் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire