ஸ்டாலினுக்காக பிரசாரம் செய்ய தமிழகம் வந்துள்ளேன்; கெஜ்ரிவால்
20 சித்திரை 2026 திங்கள் 07:06 | பார்வைகள் : 220
திமுக தலைவர் ஸ்டாலினுக்காக பிரசாரம் செய்ய நான் டில்லியில் இருந்து வந்துள்ளேன். இவரது ஆட்சிக் காலத்தில், தமிழகம் மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, பல துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது', என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; திமுக தலைவர் ஸ்டாலினுக்காக பிரசாரம் செய்ய நான் டில்லியில் இருந்து வந்துள்ளேன். அவர் எனது நெருங்கிய நண்பர். ஆனால் அதையும் தாண்டி, தமிழக மக்களுக்காக அவர் மிகச்சிறந்த பணிகளைச் செய்து வருவதால் அவருக்காகப் பிரசாரம் செய்ய வந்துள்ளேன். அவரது ஆட்சிக் காலத்தில், தமிழகம் மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, பல துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மக்கள் அவருக்கு வாக்களித்தால், இந்தப் பணிகள் தொடரும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் இன்னும் அதிக முன்னேற்றம் அடையும். ஆனால் அதிமுக மற்றும் பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இதுவரை செய்யப்பட்ட அனைத்து நல்ல திட்டங்களும் பாழாகிவிடும். ஏனெனில் டில்லியிலும் பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் செய்த அனைத்து நல்ல திட்டங்களையும் அவர்கள் முழுமையாக அழித்துவிட்டார்கள்.
த்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை ஸ்டாலின் வலுவாக எதிர்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொகுதி சீர்திருத்த மசோதா ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். அது தோற்கடிக்கப்பட்டது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது மத்தியில் உள்ள மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகும். இப்போது பாஜ அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று நான் நினைக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan