Paristamil Navigation Paristamil advert login

இந்திய கப்பல்கள் மீதான தாக்குதல் தற்செயலானது: ஈரான் அரசு விளக்கம்

இந்திய கப்பல்கள் மீதான தாக்குதல் தற்செயலானது: ஈரான் அரசு விளக்கம்

20 சித்திரை 2026 திங்கள் 06:24 | பார்வைகள் : 198


ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கொடி ஏந்திய கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்த நிலையில், இது தற்செயலானது என ஈரான் அரசு விளக்கம் அளித்து உள்ளது.

மேற்காசிய நாடான ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டுள்ளது.  ஈரானின் இந்த அறிவிப்புக்குப் பின், ஜலசந்தியை நோக்கி சென்ற 20 சரக்கு கப்பல்கள் ஓமன் நோக்கி திருப்பி அனுப்பப்பட்டன.

கண்டனம்இதற்கிடையே, ஈரான் ராணுவ படகுகள், சில எண்ணெய் கப்பல்களை நோக்கி நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியது; இரண்டு இந்தியக் கப்பல்களும் அடங்கும். அவை 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு சென்றவை.  துப்பாக்கிச் சூட்டில் கப்பல்களுக்கோ, அதில் இருந்த ஊழியர்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியக் கொடியுடன் வந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து  உள்ளது.

இந்தியாவுக்கான ஈரானின் துாதர் முகமது பதாலியை வரவழைத்து, நம் வெளியுறவு அமைச்சகம் நேற்று  கடும் கண்டனம் தெரிவித்தது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒருங்கிணைந்த மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில், அவ்வழியை கடக்கும் 21 இந்திய கப்பல்களின் விபரங்களை ஈரானிடம் மத்திய அரசு முன்கூட்டியே பகிர்ந்துள்ளது.அதையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டதால், அவை திரும்பி செல்ல நேரிட்டன.

இது குறித்து நம் நாட்டுக்கான ஈரான் துாதர் டாக்டர் முகமது பதாலி கூறுகையில், “இந்தச் சம்பவம் தற்செயலானது. இது, தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்டது,” என, மத்திய அரசிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது அவரிடம், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் தடையின்றி பயணிக்க தலைமையகத்திடம் உறுதிமொழி பெற்று அளிக்கும்படி மத்திய அரசு வலியுறுத்தியது