இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த முன்னணி நடிகை !
19 சித்திரை 2026 ஞாயிறு 17:16 | பார்வைகள் : 1781
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்று காலை, இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அழகான புகைப்படம் மூலம் பகிர்ந்து கொண்டனர்.
அந்த புகைப்படத்தில், இவர்களது மூத்த மகள் துவா , கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் 'பாசிட்டிவ்' ரிசல்ட் காட்டும் பரிசோதனை கருவியை பிடித்திருப்பது போல காட்சியளிக்கிறார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களின் வாழ்த்துமழையில் நனைந்து வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு, 2024, செப்டம்பர் 8-ம் தேதி துவா பிறந்தார். தற்போது துவா பிறந்து இரண்டு ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், இரண்டாவது குழந்தையின் வருகையை தம்பதிகள் கொண்டாடி வருகின்றனர்.
ரன்வீர் சிங் தற்போது தனது 'துரந்தர் 2' படத்தின் மாபெரும் வெற்றியை அனுபவித்து வருகிறார். மறுபுறம் தீபிகா படுகோன், ஷாருக்கானுடன் 'கிங்' படத்திலும், அல்லு அர்ஜுனுடன் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிஸியான சினிமா வாழ்க்கைக்கு இடையிலும், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையின் இந்த மகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire