மீண்டும் ஒரு நட்சத்திர தம்பதிகள் பிரிவு ?
19 சித்திரை 2026 ஞாயிறு 17:10 | பார்வைகள் : 2709
தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தெலுங்கு நடிகர் சர்வானந்த். தமிழில் பெரிய அளவிற்கு இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட தெலுங்கில் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார். கடந்து சில மாதங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான 'நரி நரி நடும முராரி' மற்றும் சமீபத்தில் வெளியான 'பைக்கர்' ஆகிய திரைப்படங்கள் ஓரளவுக்கு இவருக்கு கை கொடுக்கும் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன.
அதே சமயம் கடந்த வருடம் இவருக்கும் இவரின் மனைவி ரக்சிதா ரெட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் ஒரு தகவல் வெளியானது. அந்த சமயத்தில் சர்வானந்த் தரப்பினர் அந்த தகவலை மறுத்தனர். இந்த நிலையில் தற்போது தங்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் சர்வானந்த். அது மட்டுமல்ல தனது இரண்டு வயது மகளின் பதிவு ஒன்றையும் அவர் நீக்கியுள்ளார்.
இதிலிருந்து கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2023ல் அமெரிக்காவில் பணிபுரியும் ரக்சிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்தார் சர்வானந்த். இவர்களுக்கு 2024ல் லீலாதேவி மைனேனி என்கிற பெண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
விளம்பரங்கள்
Architecte
Je propose mes services pour :
Maison, dossier pour






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire